"ஜத்து".. இந்திய அணியின் "சத்து" - WTC Final லோ ஆர்டரில் கோலியின் "சொத்து"
மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இறுதிப் போட்டியில் ஜடேஜா எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த வீரராக இருக்கப் போகிறார் தெரியுமா?
'இது எங்கள் சொத்து' , 'இது எங்கள் சொத்து' என்று விடாப்பிடியாய் இன்று சொல்ல வைத்திருக்கிறார் ரவீந்திர ஜடேஜா.. வாய்ல அடிங்க.. வாய்ல அடிங்க.. 'ஆல்ரவுண்டர்' ரவீந்திர ஜடேஜா.
ஐபிஎல் 2021 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் காட்டிய முப்பரிமாண ஆட்டம், கேப்டன் தோனியின் பணிச்சுமையை மைனஸுக்கு கொண்டுச் சென்றது என்றால் மிகையல்ல. ரவீந்திர ஜடேஜா இருந்தால், அணிக்கு அது பூஸ்ட் என்று சொல்ல வைத்துவிட்டார். இங்கிலாந்தில் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்.

ரசிகர்கள் சந்தேகம்
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. முதன் முதலாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பதாலும், இனிமேல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்குமா என்ற சந்தேகத்தினாலும் இத்தொடர் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு.

1,954 ரன்கள்
இதில், இந்திய அணியின் லோ-ஆர்டரில் முதுகெலும்பாக இருக்கப் போகும் இரு வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட், மற்றொருவர் ரவீந்திர ஜடேஜா. உள்ளூரில் டெஸ்ட் கிரிக்கெட்டில், முச்சதம் வரை விளாசியவர் ஜடேஜா. நல்ல ஆவரேஜ் வைத்திருக்கிறார். விக்கெட்டுகளை கூட. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 51 போட்டிகளில் ஆடியுள்ள ஜடேஜா, மொத்தம் அடித்துள்ள ரன்கள் 1,954. ஆவரேஜ் 36.18. பெஸ்ட் ஸ்கோர் 100 (நாட் அவுட்)

பெஸ்ட் ஸ்கோர் 86*
அதுவே, வெளிநாடு டெஸ்ட் தொடர்களில் அவர் மொத்தம் 18 போட்டிகளில் விளையாடி, 748 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 32.52. பெஸ்ட் ஸ்கோர் 86( நாட் அவுட்). குறிப்பாக, இங்கிலாந்தில் அவர் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 276 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் அடித்த 86* பெஸ்ட் ஸ்கோர் இங்கிலாந்தில் தான். இரண்டு அரைசதம் அடித்திருக்கிறார்.

பக்கா ஆல் ரவுண்டர்
பந்துவீச்சைப் பொறுத்தவரை, இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 233 ஓவர்கள் வீசியிருக்கிறார். அதில் 28 மெய்டன் ஓவர்கள். 16 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். பெஸ்ட் 4/79. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இங்கிலாந்தில் ஓரளவு டீசண்ட்டான கிரிக்கெட்டை அவர் ஆடியிருக்கிறார். குறிப்பாக, இந்த சீசனில் ஜடேஜாவின் ஃபார்ம் உச்சத்தில் இருக்கிறது. பந்தை சரியாக க்ளீயர் செய்கிறார். டிஃபண்ஸ் ஆடுகிறார். அட்டாக் செய்கிறார். பந்தை சுழற்றி விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். எந்த பந்தாக இருந்தாலும் அவரை தாண்டிச் செல்வதற்கே அச்சப்படும் அளவுக்கு ஃபீல்டிங் செய்கிறார். டோட்டலாக ஒரு பக்கா ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். நிச்சயம் இவர் நியூசிலாந்துக்கு, இங்கிலாந்துக்கும் கடினமான வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications