Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 போட்டி.. வாய்ப்பு கொடுத்ததற்கு காரணமே வேறு.. ராகுலுக்கு பதில் பண்டை எடுத்தது என்? பரபர பின்னணி

சிட்னி: இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ரிஷாப் பண்டிற்கு வாய்ப்பு கிடைத்து இருக்கும் நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுபாக நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடக்க உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சமி காயம் காரணமாக ஆடவில்லை. கோலி விடுப்பு எடுத்துள்ளதால் ரஹானே கேப்டனாக களமிறங்குகிறார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்திய அணியில் இந்த போட்டியில் மீண்டும் ரிஷாப் பண்ட் சேர்க்கப்பட்டு உள்ளார். கீப்பராக இருந்த விர்த்திமான் சாகா நீக்கப்பட்டு ரிஷாப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். சாகா முதல் டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

ஏன்

ஏன்

இந்த நிலையில் ரிஷாப் பண்ட் உள்ளே வந்தது ஏன் என்பதற்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்படுகிறது. அதன்படி ரிஷாப் பண்ட் கோலி இல்லாத காரணத்தால் அணிக்குள் வருகிறார்.கோலி இடத்தை ரிஷாப் பண்ட் நிரப்ப முடியும் என்று இந்திய அணி நிர்வாகம் நம்புகிறது.

டெஸ்ட்

டெஸ்ட்

கோலிக்கு இணையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் மண்ணில் ரிஷாப் பண்ட் ரெக்கார்ட் வைத்துள்ளார் என்பதால் இவர் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் சாகா அல்லது கே. எல் ராகுல் இருவரையும் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தவும், ரிஷாப் பண்டை வெளிநாட்டில் கீப்பராக பயன்படுத்தவும் பிசிசிஐ நினைக்கிறது.

வெளிநாடு

வெளிநாடு

வெளிநாட்டில் ராகுல், சாகாவை விட ரிஷாப் பண்ட் நன்றாக பேட்டிங் செய்கிறார். இதன் காரணமாகவே அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 7 டெஸ்ட் போட்டிகளில் ரிஷாப் பண்ட் ஆடுவார். அதில் அவர் தனது திறமையை நிரூபிக்கவில்லை என்றால் அணியில் இடம்பெற மாட்டார் என்கிறார்கள்.

Story first published: Friday, December 25, 2020, 15:48 [IST]
Other articles published on Dec 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+