Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

400 கிமீ சாலை பயணம்.. ரிஸ்க் எடுத்த ரிஷப் பண்ட்.. கோர விபத்து எப்படி நடந்தது.. முழு விவரம் இதோ!

ரூர்கி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கோர கார் விபத்தில் சிக்கியதால் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வங்கதேச அணியுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முடித்துவிட்டு வந்த ரிஷப் பண்ட்-க்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து தனது நண்பர்கள் வீடுகளுக்கும், நிகழ்சிகளுக்கு சென்று வருகிறார்.

அந்தவகையில் உத்தரகாண்ட்-க்கு சென்றிருந்த ரிஷப் பண்ட், நேற்று இரவு டெல்லிக்கு மீண்டும் புறப்பட்டுள்ளார். ஆனால் அவர் விமானத்தில் பயணம் செல்லாமல் தனது காரில் செல்ல முடிவெடுத்திருக்கிறார்.

விபத்து எப்படி நடந்தது

விபத்து எப்படி நடந்தது

உத்தர்காண்ட்-ல் இருந்து டெல்லிக்கு சாலை வழியே செல்ல சுமார் 400 கிமீ தூரம் ஆகும். கார் அனுபவம் பெற நினைத்த பண்ட், தனது BMW ( பிஎம்டபள்யூ ) சொகுசுக் காரில் பயணித்துள்ளார். நீண்ட தூர பயணத்திற்கு ஓட்டுநர் யாரையும் அழைத்துச்செல்லாமல் இரவு முழுவதும் தனியாளாக ரிஷப் பண்ட் ஓட்டிச்சென்றுள்ளார். எந்நேரமும் பிசியாக இருக்கும் பண்ட் இரவு நேரத்தில் தனியாக வாகனம் ஓட்டிச்சென்றதே விபத்திற்கு முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.

தூக்கம் காரணமா?

தூக்கம் காரணமா?

அதிகாலை நேரத்தில் வாகனம், ரூர்கீ நகரத்தில் உள்ள ஹம்மத்பூர் ஜால் அருகே சென்றுக்கொண்டிருந்துள்ளது. அப்போது நெடுஞ்சாலை என்பதால் அதிவேகமாக சென்ற கார், திடீரென பண்ட்-ன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பின் போது மலமலவென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. காரின் உள்ளே இருந்த ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்த நிலையில் இருந்துள்ளார்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இதனை பார்த்த ஊர் மக்கள், அவசர அவசரமாக ஓடி வந்து பண்ட்-ஐ மீட்டு, அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரிஷப் பண்ட்-ன் கார் முழுவதுமாக தீப்பிடித்து நாசமானது. பண்ட்-ன் உடல்நிலை குறித்து தகவல் வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு தலையிலும், கால் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் முதுகுப்பகுதியில் தோள்கள் தேய்ந்து மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக்கூறப்பட்டுள்ளது.

மேல் சிகிச்சை எங்கு?

மேல் சிகிச்சை எங்கு?

ரிஷப் பண்ட் தேவையான முதற்கட்ட சிகிச்சைகள் கொடுக்கப்பட்டிருப்பதால், உயர் சிகிச்சைக்காக இன்று அல்லது நாளை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படுவார் எனக்கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் குணமடைந்து முழு உடற்தகுதியை பெற 6 மாதங்களுக்கும் மேல் ஆகும் என்பதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Story first published: Friday, December 30, 2022, 11:14 [IST]
Other articles published on Dec 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+