Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிர்ச்சி அளித்த மேட்ச்..சின்ன பசங்களின் ஸ்காட்லாந்து டீம்.. நம்பர் 1 இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி

Recommended Video

ஸ்காட்லாந்து டீம்.. நம்பர் 1 இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி?- வீடியோ

எடின்பர்க்: நேற்று இங்கிலாந்திற்கும் ஸ்காட்லாந்திற்கும் இடையில் எடின்பர்க்கில் நடந்த போட்டியில் ஸ்காட்லாந்து மிக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அணி இங்கிலாந்து. மிகவும் வலுவான பேட்டிங் ஆர்டர், பவுலிங் ஆர்டர் என்று இளம்படையுடன், இந்திய அணிக்கு நிகராக வலம் வந்து கொண்டுள்ளது.

இந்த போட்டி நடக்கும் முன்பு வரை, இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று எல்லோரும் நினைத்து இருந்தார்கள். ஒரே கேள்வி இங்கிலாந்து எத்தனை விக்கெட் வித்தியாசத்தில் வெல்லும், இல்லை எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும் என்பது மட்டுமே.

இங்கிலாந்திற்கு சாதகம்

இங்கிலாந்திற்கு சாதகம்

இந்த போட்டி ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் நடந்தது. ஆனால் பல விஷயங்கள் இங்கிலாந்திற்கு சாதகமாக இருந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றபடி பந்து அதிக பவுன்ஸ் ஆனது. அதேபோல் இங்கிலாந்து அணி டாஸ் வென்று சேசிங் தேர்வு செய்தது. ஆனால் அதன்பின் நடந்தது எல்லாம் ஸ்காட்லாந்தின் சூரசம்காரம்.

முதலில் பேட்டிங்

முதலில் பேட்டிங்

இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்தது. டாஸ் தோற்ற ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் இறங்கியது. ஆனால் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கிராஸ், கைல் ஆகியோரின் விக்கெட் எடுக்கவே இங்கிலாந்து அணி பெரிய அளவில் திணறியது. அவர்கள் ஜோடியே கிட்டத்தட்ட 100 ரன்கள் எடுத்து ஜோதி ஏற்றியது. கிராஸ் 48 ரன்களுக்கும், கைல் 58 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள்.

ஒன் டவுன் பேட்ஸ்மேன்

ஒரு அணிக்கு மிகவும் முக்கியமானவர் ஒன் டவுன் பேட்ஸ்மேன். இந்திய அணிக்கு கோஹ்லி இருப்பது போலத்தான், ஸ்காட்லாந்து அணிக்கு கலம் மெக்லியாட். அவர் இறங்கியதுதான் தாமதம், வரிசையாக எல்லா பந்துகளையும் பவுண்டரிக்கும், சிக்ஸுக்கும் பறக்கவிட்டார். கடைசி வரை ஆட்டம் இழக்காமலே இருந்தார். தான் பிடித்த 94 பந்துகளில் 140 ரன்கள். 16 பவுண்டரி, 3 சிக்ஸ் என்று பவுண்டரிகளால் ஸ்கோர் அடித்தார்.

சூப்பர்

சூப்பர்

அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா என்பது போல, பந்துகளை நாலா புறத்திற்கும் திருப்பிவிட்டார். அடுத்து ரிச்சி, ஜார்ஜ் என்று இறங்கிய எல்லா வீரர்களுக்கும் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்டினார்கள். இதனால் 50 ஓவர் முடிவில் அந்த அணி ஐந்து விக்கெட் இழந்து 371 ரன்கள் எடுத்தது.

படு மோசம்

அதன்பின் ஒரு ஓவருக்கு 7.42 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 34 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் ஜானி பிரைஸ்டோ 105 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் ஹால்ஸ் 52 ரன்கள் எடுத்தார். இந்த மூன்று விக்கெட் வரை இங்கிலாந்து அணி நன்றாகவே ஆடியது. ஆனால் அதன் பின் வீரர்கள் மோசமாக ஆடினார்கள்.

மாறியது

வரிசையாக வந்த வீரர்கள் எல்லோரும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்கள். 29,20,12, 7 என்று என்று வரிசையாக அவுட் ஆனார்கள். அணியின் வெற்றி கையைவிட்டு நழுவிய சமயத்தில், மொயின் அலியும், லியாமும் கூட்டு சேர்ந்தனர். அவர்கள் அதிரடியாக 46, 47 ரன்கள் எடுத்தனர்.

வெற்றி

ஆனால் அவர்கள் ஜோடியும் ஸ்காட்லாந்து பந்து வீச்சில் சுருண்டது. கடைசியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் 10 விக்கெட்டிற்கு 365 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து தோல்வியடைந்தது. ஸ்காட்லாந்து வரலாற்றில் இது மிக முக்கியமான கிரிக்கெட். உலக நம்பர் ஒன் அணியை அந்த அணி வீழ்த்தியுள்ளது. அடுத்து வருடம் உலகக் கோப்பை நடக்க உள்ள நிலையில் இந்த தோல்வி இங்கிலாந்திற்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனாலும் ஸ்காட்லாந்து அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 11, 2018, 15:22 [IST]
Other articles published on Jun 11, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+