Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேரி கோமை பின்பற்ற விருப்பம் தெரிவித்த விராட் கோலி... என்ன காரணம்

ஷார்ஜா : குத்துச்சண்டை வீராங்கனையாகவும் 4 குழந்தைகளின் தாயாகவும் சிறப்பாக செயல்பட்டு வருபவர் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.

அவரிடம் இருந்து எவ்வாறு சிறந்த பெற்றோராகவும் சிறந்த வீராங்கனையாகவும் இருப்பது என்பதை பின்பற்ற விரும்புவதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சிக்காக மேரி கோமிடம் பேசிய அவர், அவர் இந்த இரண்டையும் சமநிலையில் வைத்திருப்பது குறித்து பாராட்டு தெரிவித்தார்.

ரசிகர்களின் கோப்பை கனவு

ரசிகர்களின் கோப்பை கனவு

ஐபிஎல் 2020 சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார் விராட் கோலி. அந்த அணிக்காக இதுவரை 200 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள விராட் கோலி, இதுவரை கோப்பையை கைப்பற்றவில்லை. இந்நிலையில், இந்த முறை அணியின் மற்றும் ரசிகர்களின் கோப்பை கனவை பூர்த்தி செய்யும் முயற்சியில் உள்ளார்.

ஜனவரியில் குழந்தை வரவு

ஜனவரியில் குழந்தை வரவு

கடந்த மாதத்தில் தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட விராட் கோலி, வரும் ஜனவரியில் குழந்தையின் வரவு குறித்தும் அறிவித்தார். இதையடுத்து அவர்கள் மட்டுமின்றி அவர்களது ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

மேரி கோமிற்கு பாராட்டு

மேரி கோமிற்கு பாராட்டு

இந்நிலையில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமிடம் மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, அவர், வீராங்கனையாகவும், 4 குழந்தைகளின் தாயாகவும் சிறப்பாக செயல்பட்டு வருவது குறித்து மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு

நிகழ்ச்சியில் பேசிய 6 முறை உலக சாம்பியனும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவருமான மேரி கோம், விராட் கோலி தம்பதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய கேரியரை தான் சிறப்பாக எதிர்கொள்ள தன்னுடைய கணவரும் குழந்தைகளும் சிறந்த முறையில் தனக்கு உதவுவதையும் அவர் எடுத்துக் காட்டினார்.

Story first published: Friday, October 16, 2020, 12:29 [IST]
Other articles published on Oct 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+