Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாஸ்திரி "மேஸ்திரி" ஆனதில் கங்குலி அதிருப்தி!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி தகவல்கள் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமை கோச்சாக இருந்த அனில் கும்ப்ளேவுக்கும் கேப்டன் கோஹ்லிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது மேலும் முற்றியதால் மேற்கு இந்திய தீவுகளுடனான தொடர் வரை தலைமை கோச்சாக நீட்டிக்கப்பட்ட கும்ப்ளே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியுடன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து அப்பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றவதில் 7 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணலை கிரிக்கெட் அறிவுரை குழுவின் (சிஏசி) உறுப்பினர்களாக உள்ள கங்குலி, டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் நடத்தினர்.

 கோஹ்லியுடன் ஆலோசனை

கோஹ்லியுடன் ஆலோசனை

இந்தநிலையில், தலைமை கோச் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் புதிய நபர் 2019-ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை நீடிக்க வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது. இதனால் கோஹ்லியுடன் ஆலோசித்த பிறகே முடிவை சொல்கிறோம் என்று அறிவித்தது.

 ரவி சாஸ்திரி அறிவிப்பு

ரவி சாஸ்திரி அறிவிப்பு

பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் ஒருவழியாக ரவி சாஸ்திரியை புதிய தலைமை கோச்சாக நியமித்தது சிஏசி. தலைமை கோச் பதவிக்கு ரவி சாஸ்திரி, ஷேவாக், டாம் மூடி, சிமன்ஸ், கணேஷ் உள்ளிட்டோரும் விண்ணப்பித்திருந்தனர். தலைமை பயிற்சியாளருக்கான ரேஸில் விண்ணப்பிக்கப்பட்டவர்களில் ரவி சாஸ்திரிதான் முதன்மையாக இருந்தார்.

 பின்னுக்கு தள்ளப்பட்டார்

பின்னுக்கு தள்ளப்பட்டார்

எனினும் பரபரப்பாக பேசப்பட்ட ரவி சாஸ்திரி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு முதல் இடத்துக்கு ஷேவாக் வந்தார். அவர்தான் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

 திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

பரபரப்பான சீனில் திடீர் ட்விஸ்ட்டாக ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரவி சாஸ்திரியை தேர்வு செய்வதில் கங்குலிக்கு துளி கூட விருப்பமில்லை. அவர் கோச்சாக வரக் கூடாது என்பதற்காகவே கடந்த முறை அப்பதவிக்கு விண்ணப்பித்த ரவி சாஸ்திரியை தேர்வு செய்யாமல் அனில் கும்ப்ளேவை தேர்வு செய்தார் கங்குலி. இதனால் கங்குலியும், சாஸ்திரியும் வெளிப்படையாகவே விமர்சித்து கொண்டனர்.

 கோஹ்லி அடம்

கோஹ்லி அடம்

கேப்டன் கோஹ்லி, ரவி சாஸ்திரிதான் கோச்சாக தேர்வு செய்ய வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். இதில் கங்குலிக்கு விருப்பமில்லை. எனினும் டெண்டுல்கர், கங்குலியை சமாதானம் செய்து ஒப்புக் கொள்ள வைத்துள்ளார். மேலும் புதிய பயிற்சியாளர் தேர்வில் கேப்டனின் கருத்தையும் கேட்க வேண்டியது அவசியம் என்று திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கங்குலி குறிப்பிட்டதையும் சச்சின் சுட்டிக் காட்டினார். இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார்.

 பந்து வீச்சு பயிற்சியாளர்

பந்து வீச்சு பயிற்சியாளர்

பந்து வீச்சு பயிற்சியாளரை பொருத்தவரை பாரத் அருணை நியமிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி விரும்பினார். ஆனால் இதற்கு நிச்சயம் ஒப்புக் கொள்ளாத கங்குலி, திறமையான ஜாகீர் கானை நியமித்துள்ளார். இதனால் பாங்காங்கில் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள சாஸ்திரி ஸ்கைப்பில் கங்குலியுடன் வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Story first published: Wednesday, July 12, 2017, 17:40 [IST]
Other articles published on Jul 12, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+