For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் டபுள் அர்த்தம் பதில்.. ரசிகர்கள் சிரிப்பலை.. இணையத்தை கலக்கும் தோனி பதில்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி திறமையான வீரர் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

திறமை என்றால் கிரிக்கெட்டில் மட்டுமல்ல நீங்கள் அவரிடம் ஏதாவது கேள்வி கேட்டால் உங்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு பதிலளிப்பார்.

தோனி எப்போதுமே கிரிக்கெட் களத்தில் வித்தியாசமாக யோசிக்க கூடியவர். ஆனால் வாழ்க்கையிலும் ஒரு வித்தியாசமாக தான் யோசிப்பார் என்று தற்போது ஒரு சம்பவம் உறுதிப்படுத்தி உள்ளது.

வித்தியாச பதில்

வித்தியாச பதில்

தோனி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருக்கிறார். அதில் மந்திரா பேடி தோனியிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு தோனி அளித்த பதிலே தற்போது வைரல் ஆகி வருகிறது. என்னடா தோனி இப்படி பேசிவிட்டார் என்று நினைக்க வேண்டாம். தோனி சொன்னது வித்தியாசமான பதிலாக இருந்தாலும், அதில் உண்மையும் இருக்கிறது.

சிறந்த பரிசு

சிறந்த பரிசு

சரி விஷயத்துக்கு வருவோம் தோனியிடம் உங்கள் வாழ்க்கையிலே உங்களுக்கு கிடைத்த சிறந்த பரிசு எது என்று மந்திரா பேடி கேட்க, அதற்கு தோனி பதில் அளிக்காமல் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது மந்திரா பேடி நான் வேண்டுமென்றால் உங்களுக்கு விடை தருகிறேன் அது உங்கள் மகள் என்று சைகையில் கூறினார்.

தோனி பதில்

தோனி பதில்

இதற்கு உடனே தோனி, மகள் என்பது பரிசு கிடையாது. அது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. பரிசு என்றால் மற்றொருவர் நமக்கு கொடுப்பது என்று வித்தியாசமாக பதில் அளித்தார். தோனியின் இந்த பதில் இரட்டை அர்த்தத்தில் இருப்பதாக கூறி ரசிகர்கள் நகைச்சுவையில் சிரித்து வருகின்றனர்.

விளம்பரம் ?

விளம்பரம் ?

தல தோனிக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா என்று பலரும் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.ஆனால், இது தோனியின் பதிலாக இருக்காது. தோனியை வைத்து விளம்பரம் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதேனிடையே, தோனி தனது 2011 உலககோப்பையில் எந்த Hair style வைத்து இருந்தாரோ, அதே போல் ஒரு ஸ்டைலை தற்போது வைத்திருக்கிறார்.

Story first published: Wednesday, October 5, 2022, 17:53 [IST]
Other articles published on Oct 5, 2022
English summary
MS Dhoni Bizzare answer to Mandira bedi wins internet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+