For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. ஹர்திக் பாண்டியாவுக்கு அடிச்ச லக்.. ஸ்மித்துக்கு பின்னடைவு

மும்பை : இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் சற்று முன்பு வரை தொடங்கியது.

டெஸ்ட் தொடரை வென்ற உத்வேகத்துடன் இந்தியா விளையாடினாலும், கடைசியாக 2019ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியை தழுவியது.

இதனையடுத்து, டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹிர்திக் பாண்டியா, முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். ரோகித் சர்மா இல்லாத நிலையில், இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.

நல்ல லக்

நல்ல லக்

மாலை நேரத்தில் ஆடுகளத்தின் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் , இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்பதால் ஹர்திக் பாண்டியாவுக்கு இது நல்ல லக்காக அமைந்துள்ளது. இதே போன்று இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்களையும், ஜடேஜா, குல்தீப் யாதவ் என 2 ஸ்பின்னர்களையும் வைத்து விளையாடுகிறது.

ஹர்திக் பேச்சு

ஹர்திக் பேச்சு

கேப்டனாக ஒருநாள் போட்டியில் செயல்படுவதை பெருமையாக உணர்வதாக கூறியுள்ள ஹர்திக் பாண்டியா, ஓய்வில் தனது திறமையை வளர்த்து கொள்ள பயிற்சி செய்ததாகவும், இந்த தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் ஹர்திக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய ஸ்மித், டாசை இழந்தது நல்லது என்றும், முதலில் பேட்டிங் செய்து சிறப்பாக விளையாடுவோம் என்றும் கூறியுள்ளார்.

ஸ்மித் பேச்சு

ஸ்மித் பேச்சு

உலக கோப்பை தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியை கட்டமைக்கும் பொறுப்பு தமக்கு உள்ளதாகவும் ஸ்மித் கூறியுள்ளார். அலெக்ஸ் கெரி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியா சென்றுள்ளதாக குறிப்பிட்ட ஸ்மித், வார்னர் காயம் குணமடையாததால், அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாட வில்லை என்று கூறியுள்ளார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, சுப்மன் கில், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, கேஎல் ராகுல், 6, ஹர்திக் பாண்டியா, 7, ஜடேஜா, 8, முகமது ஷமி, 9, முகமது சிராஜ், 10, ஷர்துல் தாக்கூர், 11, குல்தீப் யாதவ்

Story first published: Friday, March 17, 2023, 13:38 [IST]
Other articles published on Mar 17, 2023
English summary
Huge advantage for hardik pandya after winning the toss in mumbai odi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+