Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களத்தில் ஏற்பட்ட குழப்பம்.. நோ பாலில் அவுட்டான மாயங் அகர்வால்.. சொந்த மண்ணில் ஏற்பட்ட சோகம்

பெங்களூரு: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் குழப்பம் ஒன்று ஏற்பட்டது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. மாயங் அகர்வால் தனது சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார்.

பந்துவீச்சும் பேட்ஸ்மேன்களுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படுத்தவில்லை. இதனால் மாயங் அகர்வால் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கை அப்பீல்

இலங்கை அப்பீல்

இதற்கு தகுந்தாற் போல் மாயங் அகர்வால் அபாரமாக கவர் டிரைவ் ஷாட் ஆடி பவுண்டரி விளாசினார். இந்த நிலையில் ஆட்டத்தின் 1.4வது ஓவரில் பெர்னான்டோ வீசிய பந்தை மாயங் அகர்வால் எதிர்கொண்டார். அப்போது மாயங் அகர்வாலுக்கு இலங்கை வீரர்கள் எல் பி டபிள்யூ அவுட் கேட்டனர்.

ரன் அவுட்

ரன் அவுட்

அப்போது பந்தை யாரும் கவனிக்கவில்லை. இதனை பயன்படுத்தி கொண்டு ரன் ஓடிவிடலாம் என மாயங் அகர்வால் நினைத்தார். ஆனால் பாயிண்டில் நின்ற மேத்தியூஸ், பந்தை பிடித்து கீப்பரிடம் எறிந்தார். இதனை கவனித்த ரோகித் ரன் ஓடவில்லை. ஆனால் கீப்பர் குனதிகலா, ரன் அவுட் செய்வதற்கு முன் நடுவரிடம் ரிவ்யூ கேட்டார்.

நோ பால்

நோ பால்

இதனால், இது ரன் அவுட்டா இல்லை, எல்பி டபிள்யூவா இல்லை பந்து கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என்று அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடுவர்கள் இது அவுட்டா என தாங்களே மறு ஆய்வு செய்யும் போது இது நோ பால் என தெரியவந்தது. இதனால் களத்தில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

நோ பாலில் ரன் அவுட் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்ற விதி உள்ளது. ஆனால் இலங்கை வீரர்கள் எல்.பி.டபிள்யூவிற்கு ரிவியூ கேட்டுவிட்டு பின்னர் ரன் அவுட் செய்தனர். இதனால் இது டெட் பால் என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இது ரன் அவுட் தான் என அறிவிக்கப்பட மாயங் அகர்வால் 4 ரன்களில் வெளியேறினார்.

Story first published: Saturday, March 12, 2022, 16:38 [IST]
Other articles published on Mar 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+