Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசையில் நிகழ்ந்த குழப்பம்.. ஒரே நாளில் 3 முறை மாற்றம்.. அது எப்படி திமிங்கலம் முடியும்?

துபாய் : ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஒரே நாளில் மூன்று முறை நிகழ்ந்த மாற்றம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வருவதற்கு முன்பு நாம் அனைவரும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நமது அணி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை தான் பார்ப்போம்.

அதிலும் குறிப்பாக முதலிடத்தில் பிடிக்கும் அணிக்கு செங்கோல் போல் ஒரு பரிசு வழங்கப்படும்.

குழப்பமான மாற்றம்

குழப்பமான மாற்றம்

இந்த நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வந்துவிட்டதால் ரசிகர்களின் கவனம் அனைத்தும் அதன் மேல் திரும்பியது. மேலும் இன்று ஐசிசி இணையதளத்தில் ஒரு குழப்பமான மாற்றம் நிகழ்ந்தது. அதாவது இன்று காலை 8 மணி நிலவரப்படி ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்தது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஆனால் மதியம் ஐசிசி வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திற்கும் சென்றது. இதனை பார்த்ததும் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். நமது அணி மீண்டும் முதல் இடத்துக்கு வந்து விட்டது என்று அவர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

மீண்டும் மாற்றம்

மீண்டும் மாற்றம்

இந்த நிலையில் மீண்டும் மாலை 5 மணி நிலவரப்படி ஐசிசி வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். இதன் மூலம் எதை வைத்து தான் ஐசிசி அணியின் இடத்தை நிர்ணயிக்கிறது என்றே தெரியவில்லையே என்று அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

முதல் இடத்திற்கு வாய்ப்பு

முதல் இடத்திற்கு வாய்ப்பு

தற்போது இந்திய அணி டெஸ்டில் இரண்டாவது இடத்திலும் டி20 போட்டிகளில் தொடர்ந்து முதலிடத்தில் ஒரு நாள் தொடரில் நான்காவது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கொண்ட தொடரை இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றினால் ஒரு நாள் தொடரில் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, January 17, 2023, 18:07 [IST]
Other articles published on Jan 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+