Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடித்ததும் ஜெய் ஸ்ரீ ராம் பாடல்.. பாக். எதிரான போட்டியில் எழுந்த சர்ச்சை

கேண்டி : பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடிக்கும் போதெல்லாம் ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஸ்ரீ ராம் பாடல் மைதானத்தில் ஒளிபரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டி பாகிஸ்தானில் தான் நடைபெற்று இருக்க வேண்டும்.

Huge controversy arises in india Pakistan match when religious song played in ground

ஆனால் இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாட மாட்டோம் என போர் கொடி தூக்கியதால் ஹைபிரிட் மாடல் முறைப்படி நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்பட முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறினாலும் இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அபாரமாக விளையாடி அணியை காப்பாற்றினர்.

அப்போது ஹர்திக் பாண்டியா அடித்த ஒவ்வொரு பவுண்டரிக்கும் மைதானத்தில் ஜெய் ஸ்ரீ ராம் பாடல் டிஜேவால் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அரசியலையும் கிரிக்கெட்டையும் இந்தியா கலக்குவதாக குற்றச்சாட்டியுள்ளது.

எனினும் இந்த டிஜே ஏற்பாடை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் செய்திருப்பதாக தகவல் வெளியானது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போது அதனை மதரீதியாக பயன்படுத்தி காசு பார்க்கும் முயற்சியில் அந்த நிறுவனம் இறங்கி விட்டதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்ற ஒரு போட்டியில் முகமது சமியை பார்த்து ஜெய்ஸ்ரீராம் என ரசிகர் ஒருவர் கத்தியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.

Huge controversy arises in india Pakistan match when religious song played in ground

இந்த நிலையில் இலங்கையில் நடக்கும் போட்டிக்கு அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது மத ரீதியான பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ளவே முடியாது என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது கௌதம் கம்பீர் நடு நடுவரலை உயர்த்தி காட்டியதற்கு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பியதே காரணம் என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.

அரசியலையும் விளையாட்டையும் கலக்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்து. இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இந்த செயல் நியாயமா என்ற கேள்வி எழுந்தது. ஒரு காலத்தில் இந்தியா வெற்றி பெற்றாலும் பவுண்டரிகள் அடித்தாலும் சக் தே இந்தியா, ஜெய் ஹோ, வந்தே மாதரம் போன்ற பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.ஆனால் முதல்முறையாக மதரீதியான பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 4, 2023, 21:37 [IST]
Other articles published on Sep 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+