For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி அவுட்டில் சர்ச்சை.. தவறான முடிவை அறிவித்த நடுவர்கள்.. கடுப்பான பயிற்சியாளர்

டெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு தவறாக அவுட் தரப்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணி தங்களது முதுல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

கேஎல் ராகுல் 17 ரன்களும், ரோகித் சர்மா 32 ரன்களும் ஆட்டமிழக்க, 100வது டெஸ்டில் விளையாடிய புஜாரா டக் அவுட் ஆனார்.

மீட்கும் முயற்சி

மீட்கும் முயற்சி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து இந்திய அணியை காப்பாற்றும் பொறுப்பு விராட் கோலி தலை மீது வந்து விழுந்தது. இதனையடுத்து ஜடேஜாவுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட்டார்.

ஜடேஜா அவுட்

ஜடேஜா அவுட்

ஆஸ்திரேலிய அணி பந்துகளை தடுத்து மட்டும் விளையாடாமல், அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க தொடங்கிவிட்டது என ரசிகர்கள் நினைத்த போது தான் இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கோலி சர்ச்சை அவுட்

கோலி சர்ச்சை அவுட்

பொறுப்பாக விளையாடிய ஜடேஜா 74 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்த நிலையில், முர்ஃபி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். இதனையடுத்து அடுத்த 3 ஓவர்களில் விராட் கோலிக்கு நடுவர் தவறான முடிவு அளித்து அவுட் கொடுத்து விட்டார்கள். மாட் குஹன்மேன் வீசிய பந்தை தடுக்க முயன்ற போது, பந்து பேட்டிலும், காலிலும் ஒரே நேரத்தில் பட்டது.

தவறான முடிவு

தவறான முடிவு

மேலும் பந்து ஸ்டம்பை விட்டு வெளியே சென்றது போல் இருந்தது. இதனால் டிஆர்எஸ் முடிவை விராட் கோலி எடுத்தார். ரிப்ளேவிலும் பந்து முதலில் பேட்டில் பட்டு, காலில் பட்டது தெரியவந்தது. ஆனால் மூன்றாம் நடுவர் பந்து காலில் தான் முதலில் பட்டது என்று முடிவு எடுத்து அவுட் கொடுத்தார். இதனை இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் கடுப்பாகி எதிர்ப்பு தெரிவித்தார்.

Story first published: Saturday, February 18, 2023, 14:03 [IST]
Other articles published on Feb 18, 2023
English summary
Huge controversy over umpire wrong decision to virat kohli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+