Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினின் கடைசி ஆட்டத்தை காண டிக்கெட்டுக்கு முந்தியடிக்கும் உலக ரசிகர்கள்: விழிக்கும் எம்.சி.ஏ.

மும்பை: சச்சின் டெண்டுல்கர் கடைசியாக விளையாடும் 200வது டெஸ்ட் போட்டியை காண அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் உள்ள பல ரசிகர்கள் டிக்கெட் கேட்கிறார்கள் என்று மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 200வது டெலஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் விளையாடும் 200வது போட்டி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியைக் காண உள்ளூர் மட்டுமின்றி உலக ரசிகர்கள் ஏராளமானோர் விரும்புகிறார்கள்.

இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

டிக்கெட்டுக்கு படு கிராக்கி

டிக்கெட்டுக்கு படு கிராக்கி

சச்சின் விளையாடும் கடைசி ஆட்டத்தை காண அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் உள்ள ரசிகர்கள் டிக்கெட் கேட்கிறார்கள். ஆனால் அந்த ஆட்டத்தை காண இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்கள், எங்கள் கிளப் உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கு டிக்கெட் வழங்குவது என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். அதனால் பொது மக்களுக்கு எத்தனை டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று கூற முடியாது என்றார் பவார்.

2,000 டிக்கெட் கேட்கவில்லை

2,000 டிக்கெட் கேட்கவில்லை

இறுதி ஆட்டத்தின்போது தனக்கு 2,000 டிக்கெட்டுகள் வேண்டும் என்று சச்சின் கேட்டதாக வந்த தகவலில் உண்மை இல்லை. அவர் ஒரு டிக்கெட் கூட கேட்கவில்லை. மும்பை கிரிக்கெட் சங்கம் தான் அவருக்கு 500 டிக்கெட்டுகள் கொடுப்பது என்று நேற்று முடிவு செய்தது என்று பவார் தெரிவித்தார்.

புத்தகம்

புத்தகம்

சச்சின் விளையாடிய போட்டிகள் குறித்த அனைத்து புள்ளிவிவரங்களுடன் 150 முதல் 160 பக்கங்களுடன் கூடிய புத்தகத்தை அச்சடித்து கொடுக்கநாக்பூரில் உள்ள பதிப்பகம் ஒன்று முன் வந்துள்ளதாக பவார் தெரிவித்தார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

வாங்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் சச்சினின் கடைசி ஆட்டத்தை பார்க்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அனுமதிக்கப்படுவாரா என்று பவாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், மும்பை கிரிக்கெட் சங்க வளாகத்திற்குள் அனுமதிக்கப்படும் அனைவரும் வந்து போட்டியைக் காணலாம் என்றார்.

ஷாருக்கானுக்கு தடை

ஷாருக்கானுக்கு தடை

கடந்த 2012ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்தபோது மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் பிரச்சனை செய்தார் ஷாருக்கான். இதையடுத்து அவர் ஸ்டேடியத்திற்குள் நுழைய 5 ஆண்டுகள் தடை விதித்து மும்பை கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 23, 2013, 11:11 [IST]
Other articles published on Oct 23, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+