சிஎஸ்கேவுக்கு விழுந்த பெரும் அடி.. மேலும் ஒரு பவுலர் ஐபிஎல்-ல் இருந்து விலகல்.. என்ன செய்வார் தோனி?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பெரியம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டும் ஒரு நட்சத்திர வீரரை இழக்க வேண்டிய சூழலுக்கு தோனி தள்ளப்பட்டுள்ளார்.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்தாண்டு சென்னை அணிக்கு மிகவும் முக்கியமான சீசனாக அமையவுள்ளது. இதற்கு காரணம் கேப்டன் எம்.எஸ்.தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என்பது தான்.

சிஎஸ்கேவின் நிலைமை
41 வயதாகும் கேப்டன் தோனி இந்தாண்டு சென்னை அணிக்கு கோப்பையை வென்றுக்கொடுத்துவிட்டு, ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு தடை போடும் வகையில் தொடக்கத்திலேயே பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் கெயில் ஜேமிசன் ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாக அறிவித்தார். நியூசிலாந்தை சேர்ந்த ஜேமிசன், முதுகில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மேலும் ஒருவர் காலி
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு அடி விழுந்துள்ளது. சிஎஸ்கேவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகேஷ் சௌத்ரியும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்தாண்டு சிஎஸ்கேவுக்கு மோசமாக அமைந்த போதும், ஒரே ஒரு நல்ல விஷயமாக பார்த்தது முகேஷ் சௌத்ரியின் பவுலிங் தான். தீபக் சஹார் இல்லாத போது சிஎஸ்கேவுக்கு ஒரு எதிர்கால பவுலர் கிடைத்துவிட்டார் என ரசிகர்கள் பாராட்டியிருந்தனர்.

சூப்பர் ரெக்கார்ட்
கடந்த சீசனில் சிஎஸ்கேவுக்காக அறிமுகமான முகேஷ் சௌத்ரி 13 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். முகேஷ் சௌத்ரி என்னதான் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார் என்றாலும் அணிக்கு தேவையான சூழலில் தோனியின் திட்டத்தை புரிந்துக்கொண்டு விக்கெட் எடுத்து தந்தார். இந்தாண்டு ஜேமிசனும் இல்லாத சூழலில் முகேஷ் சௌத்ரியும் விலகியிருப்பது பின்னடைவை கொடுத்துள்ளது.

பவுலிங் யூனிட்
சென்னை அணியை பொறுத்தவரையில் இந்தாண்டு பவுலிங்கிற்கு தீபக் சஹார் மீண்டும் வந்துள்ளார். அவருடன் இந்திய வீரர்களாக ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங் போன்றோர் தான் சொல்லிக்கொள்ளும்படி உள்ளனர். அயல்நாட்டு வீரர்களாக உள்ள பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ் போன்றோர் தான் காப்பாற்றவுள்ளனர்.


Click it and Unblock the Notifications