Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிலெய்ட் மைதானம் அருகே இடி விழுந்தது.. உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர்கள்..ஆட்டம் நிறுத்தம்..!!

அடிலெய்ட் : ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2வது போட்டி பகல் இரவு ஆட்டமாக அடிலய்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.

221 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோருடன் 2வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்தது.

ஸ்மித் அபாரம்

ஸ்மித் அபாரம்

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லாபஸ்சேங் சதம் விளாசி ஆட்டமிழந்தார். மறுபுறம் அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்த கேப்டன் ஸ்மித். 93 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதனையடுத்து டிராவிஸ் ஹேட், கேமிரான் கிரின் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

இருப்பினும் அலெக்ஸ் கேரி நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். அவருக்கு மிட்செல் ஸ்டார்க் 39 ரன்களும், மைக்கேல் நெசர் 35 ரன்களும் எடுத்து உறுதுணையாக இருந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 473 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்து டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஹசிப் ஹமீது 6 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 4 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 17 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோருடன் தடுமாறியது

ஆட்டம் நிறுத்தம்

ஆட்டம் நிறுத்தம்

அப்போது டேவிட் மாலன் பந்தை எதிர்கொள்ள காத்திருந்த போது பயங்கர சத்தத்துடன் மைதானம் அருகே இடி விழுந்தது. இதனால் அவர் பந்தை எதிர்கொள்ளாமல் விலகினார். அதிர்ஷ்டவசமாக இதில் ரசிகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் எவ்வித காயமும், ஆபத்தும் ஏற்பட வில்லை. இது வீரர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இடி விழுந்த காட்சி ஸ்டம்பில் பொறுத்தப்பட்டு இருந்த கேமிராவில் பதிவானது. இந்த புகைப்படத்தை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் வெளியிட்டுள்ளார்.

Story first published: Friday, December 17, 2021, 20:01 [IST]
Other articles published on Dec 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+