For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Hundred 2024 - டாம் கர்ரன் வெறியாட்டம்.. ஓவல் அணியை கதற விட்ட சதர்ன் பிரேவ்.. கோப்பை வென்று அசத்தல்

லார்ட்ஸ்: 2024 ஹண்ட்ரட் தொடரின் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் ஓவல் இன்வின்ஸிபில் மற்றும் சதர்ன் பிரேவ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஓவல் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் வில் ஜாக்ஸ் அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். சாம் கரன் 25 ரன்கள், ஜோர்டான் 25 ரன்கள் எடுத்தனர். ஒரு கட்டத்தில் 92 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்த ஓவல் அணி 102 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு சென்றது.

அப்போது களத்தில் இருந்த டாம் கர்ரன் அதிரடியாக ஆடினார். இரண்டு ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்த அவர் 11 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் அவர் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். டாம் கர்ரனின் அந்த ஆட்டமே இந்த போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது

hundred 2024 tom curran

ஓவல் அணி 100 பந்துகளில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த சதர்ன் பிரேவ் அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ஓரளவு ரன் சேர்த்த போதும் அதன்பின் விக்கெட்கள் வரிசையாக சரிந்தன. அந்த அணியின் துவக்க வீரர்கள் அலெக்ஸ் டேவிஸ் 23 பந்துகளில் 35 ரன்களும், ஜேம்ஸ் வின்ஸ் 22 பந்துகளில் 24 ரன்களும் சேர்த்து இருந்தனர்.

மூன்றாம் வரிசையில் இறங்கிய பிளாய் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் அந்த அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. அனுபவ டி20 வீரர் கீரான் பொல்லார்ட் அந்த அணியை காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர் 4 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தார்.

ஓவல் அணியின் பந்து வீச்சாளர் ஷகிப் மஹ்மூத் 20 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதை அடுத்து சதர்ன் பிரேவ் அணி 100 பந்துகளில் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17 ரன்கள் வித்தியாசத்தில் ஓவல் இன்வின்சிபில் அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஹண்ட்ரட் கோப்பையை கைப்பற்றியது.

Story first published: Monday, August 19, 2024, 8:33 [IST]
Other articles published on Aug 19, 2024
English summary
Hundred 2024 - Oval Invincible vs Southern Brave Final - Tom Curran shines as Oval became champions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+