நம்ம ஊர்காரய்ங்க மூளையோ… மூளை..!! டாக்சியில் ஐபிஎல் ஸ்கோர்போர்டு..! அசந்து போன ஐசிசி
Recommended Video

ஹைதராபாத்: டாக்சியில் ஐபிஎல் ஸ்கோர் போர்டு வைத்து, ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தும் ஓட்டுநர் ஒருவருக்கு பாராட்டுகள் குவிந்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடந்து வருவது பல கிரிக்கெட் ரசிகர்களையும் உற்சாகப் படுத்தியுள்ளது. இந்த தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. போட்டிகள் எங்கு நடந்தாலும் அந்த அந்த அணியின் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து உற்சாகப் படுத்தி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டியில் ரசிகர்களின் செயல்பாடுகள் எப்போதுமே வித்தியாசமானதாக தான் இருக்கும். அதிலும், ஹைதராபாத்தைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் தனது காரின் மேல் பகுதியில் ஐபிஎல் ஸ்கோர் போர்டு வைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கடவுளாகவே மாறிவிட்டார்.

ஸ்கோர் தெரிய ஈஸி வழி
வீட்டில், அலுவலகத்தில் என எங்கு போனாலும் டிவி, செல்ஃபோன் மூலம் ஐபிஎல் ஸ்கோர் தெரிந்துகொள்ளலாம். மாறாக நீங்கள் சாலையில் பயணம் மேற்கொண்டு இருந்தால் எப்படி தெரிந்து கொள்வது?

ஓட்டுநருக்கு சபாஷ்
அப்போது உங்களுக்கு பிடித்தமான அணி விளையாடினால் ஸ்கோரை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வமாக இருக்கும். ஆனால் சாலையில் இருக்கும் போது ஸ்கோரை தெரிந்து கொள்ள முடியாத சங்கடத்தை போக்கவே ஐபிஎல் ஸ்கோர் போர்டை டாக்ஸி மேல் வைத்துள்ளார் இந்த ஹைதரபாத் ஓட்டுநர்.

கொண்டாடும் ரசிகர்கள்
சமூக வலைதளங்களில் இந்த டாக்ஸியின் ஐபிஎல் ஸ்கோர் போர்டு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்த டாக்ஸி ஓட்டுநரை தலைமேல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
ஐசிசி பாராட்டு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையும் டாக்ஸி ஸ்கோர் போர்டு கவர்ந்துள்ளது. ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில், "கிரிக்கெட் தான் வாழ்க்கை என்றால்...' என்று பெருமிதம் பொங்க டாக்ஸி ஸ்கோர் போர்டு புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications