Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன்யா இப்படி ஏமாத்திட்டீங்க.. 4 பந்துகளில் முகம் வாடிய காவ்யா மாறன்.. SRH அணியை பொளக்கும் ரசிகர்கள்!

கொல்கத்தா : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை வந்த போது உற்சாகத்தில் துள்ளிக் குதித்த காவ்யா மாறன், தோல்வியடைந்த பின் சோகமாக இருந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

ஐபிஎல் அணிகளுக்கு இருக்கும் ரசிகர்களை போல், ஐபிஎல் உரிமையாளர்களுக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ராஜஸ்தான் அணி போட்டிகளின் போது ஷில்பா ஷெட்டி வந்த போது, அவர் பக்கம் கேமரா திரும்பும் போதெல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். அதேபோல் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாரூக் கான் வந்தால் கொல்கத்தா மைதானத்தில் சத்தம் காதை கிழித்துவிடும்.

Hyderabad team owner Kavya Maran reaction is trending after SRH lost the match in the Last over against KKR in the IPL 2024

பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவை காண்பதற்காக மைதானத்தில் ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள். இவர்கள் எல்லோரும் பாலிவுட் நட்சத்திரங்களாக இருந்தாலும், ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்கு தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய பட்டாளம் உருவாகி வருகிறது. எப்போது காவ்யா மாறனை கேமராவில் காட்டிலும் சோசியல் மீடியாவில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு ட்ரெண்ட் செய்துவிடுவார்கள்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடியது. வழக்கமாக சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளை மட்டுமே பார்க்கும் வழக்கத்தை கொண்டுள்ள காவ்யா மாறன், இந்த சீசனில் கொல்கத்தா மண்ணில் நடந்த போட்டியையும் நேரில் பார்க்க வந்திருந்தார். நீண்ட நேரமாக கேமரா முன் காவ்யா மாறன் வரவில்லை.

ஐதராபாத் அணி வெற்றிபெற்ற கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கப்பட்டது. அப்போது உற்சாகமான காவ்யா மாறன், விஐபி அறையில் இருந்து உற்சாகத்தில் துள்ளிக் குதித்து வெளியில் வந்தார். ஆனால் அடுத்த 4 பந்துகளில் அஹ்மத், கிளாசன் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதனால் ஐதராபாத் அணி தோல்வியை சந்தித்தது.

இதனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சோகமடைந்தார். 4 பந்துகளுக்குள் உற்சாகத்தில் எல்லையில் இருந்து சோகமடைந்த காவ்யா மாறனின் ரியாக்சன் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இப்படியொரு உரிமையாளரை சோகமாக்கியதற்காக ஐதராபாத் அணியை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Sunday, March 24, 2024, 11:51 [IST]
Other articles published on Mar 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+