Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் கிரிக்கெட் வீரரா மாறினதே ஒரு விபத்துதான்... ஸ்பின்னர் ரவி அஸ்வின் ஜிலீர்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நடைபெற்று முடிந்துள்ள 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 400வது விக்கெட்டை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார் ஸ்பின்னர் ரவி அஸ்வின்.

இந்நிலையில் தான் கிரிக்கெட் வீரராக மாறியதே ஒரு விபத்துதான் என்று ரவி அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஹீரோவான ரவி அஸ்வின்

ஹீரோவான ரவி அஸ்வின்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் ஹீரோக்களில் ஒருவராக மாறியுள்ளார் ரவி அஸ்வின் தொடர்ந்து தன்னுடைய 5 விக்கெட்டுகள் சாதனையை அவர் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கிரிக்கெட் வீரரானது விபத்து

கிரிக்கெட் வீரரானது விபத்து

இந்த 4 விக்கெட்டுகள் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 400 விக்கெட்டுகள் சாதனையை அவர் மேற்கொண்டுள்ளார். அவரின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கிரிக்கெட் வீரராக மாறியதே ஒரு விபத்து தான் என்று ரவி அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரராவேன் என நினைக்கவில்லை

கிரிக்கெட் வீரராவேன் என நினைக்கவில்லை

நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு பிசிசிஐ டிவிட்டர் பக்கத்திற்காக பேசிய அஸ்வின், தான் மிகச்சிறந்த கிரிக்கெட் லவ்வராக இருந்ததாகவும் தற்போது கிரிக்கெட் வீரராக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். தான் தன்னுடைய கனவுகளுடன் வாழ்வதாகவும் இந்திய ஜெர்சியை போட்டுக் கொண்டு தான் விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வெற்றிகளில் கைகோர்ப்பு

கடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் தற்போதைய இங்கிலாந்து தொடரிலும் தவிர்க்க முடியாத ஸ்பின்னராக இந்தியாவின் வெற்றித் தருணங்களில் கைகோர்த்து வருகிறார் ரவி அஸ்வின். இந்நிலையில் தான் இன்னும் 4 -5 ஆண்டுகள் விளையாடுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, February 26, 2021, 13:44 [IST]
Other articles published on Feb 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+