கடினமான நேரங்கள்ல இந்தியாவை வெற்றி பெற செய்யணும்... இதுதான் இலக்கு... ரிஷப் பந்த் வெளிப்படை
டெல்லி : கடந்த 2019 உலக கோப்பை அரையிறுதி போட்டியின்போது அவுட்டானது மிகவும் மோசமான தருணமாக இருந்ததாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் கடினமான நேரங்களில் இந்தியாவை வெற்றி பெற செய்வதே தனது கனவாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து நம்ப முடியாத செயல்களை செய்வதே தனது இலக்காக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான செயல்பாடு
கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது சிறப்பான ஆட்டங்களை இந்திய அணிக்கு பரிசளித்து அதன்மூலம் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை வெற்றி பெற காரணமாக அமைந்தார் ரிஷப் பந்த். குறிப்பாக இறுதி போட்டியில் இவரது சிறப்பான ஆட்டத்திற்கு அங்கீகாரமாக ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சரியாக விளையாடாத ரிஷப்
கடந்த 2019 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதிய இந்திய அணி தோல்வியுற்றது. இந்த போட்டியில் விளையாடிய ரிஷப் பந்த் சரியாக விளையாடாமல் அவுட்டானார். இந்நிலையில் அந்த போட்டியில் அவுட் ஆனது மோசமான தருணமாக தனக்கு அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் வருத்தம்
அந்த தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டதாகவும், அத்தகைய சந்தர்ப்பம் மீண்டும் எப்போது அமையும் என்று தெரியவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். கடினமான நேரங்களில் இந்திய அணிக்காக கைகொடுத்து அந்த போட்டியை வெற்றி கொள்வதே எப்போதும் தனது கனவாக இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரிஷப்பின் இலக்கு
மேலும் கடினமான நேரங்களில் நம்ப முடியாத செயல்களை செய்து சிறப்பாக விளையாடுவதை தனது இலக்காக வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னை பொருத்தவரை போட்டியின் வெற்றியாக 20 ரன்கள் அல்லது மிகச்சிறந்த கேட்ச் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications