Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் சூப்பரா இருக்கேன்... சீக்கிரத்துலேயே பறக்க தயாராவேன்... கங்குலி நம்பிக்கை

கொல்கத்தா : மாரடைப்பால் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி 5 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

அவரை வீட்டிலேயே மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் முற்றிலும் நலமாக உள்ளதாகவும் விரைவில் பறக்க தயாராவேன் என்றும் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஞ்சியோபிளாஸ்ட் அறுவை சிகிச்சை

ஆஞ்சியோபிளாஸ்ட் அறுவை சிகிச்சை

பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கடந்த சனிக்கிழமை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் 3 அடைப்புகள் கண்டறியப்பட்டு, உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இன்று டிஸ்சார்ஜ்

இன்று டிஸ்சார்ஜ்

இந்நிலையில் 5 நாட்களுக்கு பிறகு தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினமே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், ஒருநாள் கழித்து இன்றைய தினம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் அறிவிப்பு

மருத்துவர்கள் அறிவிப்பு

அவர் தொடர்ந்து மருத்துவர்களால் அவரது வீட்டிலேயே கண்காணிக்கப்படுவார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த வுட்லாண்ட்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தான் பூரண நலத்துடன் உள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களுக்கு நன்றி

மருத்துவர்களுக்கு நன்றி

மருத்துவமனை வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கூடிய விரைவில் தான் பறப்பதற்கு தயாராவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே, சவுரவ் கங்குலிக்கு விரைவிலேயே இரண்டாவது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, January 7, 2021, 14:40 [IST]
Other articles published on Jan 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+