Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

டெல்லி: இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோஹ்லியை பல ரசிகர்களுக்கும் பிடித்திருக்கலாம், ஆனால் அவருக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ்தானாம். வில்லியர்ஸ் திறமையை ஆஹா, ஓஹோவென புகழ்கிறார் கோஹ்லி.

இதுகுறித்து கோஹ்லி கூறியதாவது: டெல்லி டெஸ்ட் போட்டியில் 297 பந்துகளை சந்தித்த டிவில்லியர்ஸ் 43 ரன்களில் அவுட் ஆனார். ஏற்கனவே தொடரை இழந்த நிலையில், டெஸ்ட்டை டிரா செய்ய அவ்வளவு நேரம் பிட்சில் பொறுப்போடு நிற்பதற்கு ஒரு அர்ப்பணிப்பு உணர்வு தேவை.

I am a big admirer of AB de Villiers, says Virat Kohli

கடந்த நான்கைந்து வருடங்களாக டிவில்லியர்ஸ் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருவது ஆச்சரியமாக உள்ளது என்றார்.

இன்றைய இளம் தலைமுறையினருக்கு, டிவில்லியர்ஸ் ஆட்டம் ஒரு பாடமாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வம் தேவையில்லை என்று நினைத்திருந்தவர்கள், வில்லியர்ஸ் பேட் செய்ததை பார்த்து அந்த எண்ணத்தை மாற்றியிருப்பார்கள். இவ்வாறு கோஹ்லி தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, December 12, 2015, 13:10 [IST]
Other articles published on Dec 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+