Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'அந்த' காரணத்தால் தான் ஹேஸல் கீச்சுடன் எனக்கு நிச்சயம் நடந்தது: யுவராஜ் சிங்

மும்பை: ஹேஸல் கீச் மூலமாக தனக்கு ஒரு தோழி கிடைத்துள்ளதாக தனது வருங்கால மனைவி பற்றி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இங்கிலாந்தை சேர்ந்த மாடலும், நடிகையுமான ஹேஸல் கீச்சை திருமணம் செய்ய உள்ளார். அண்மையில் தான் இந்தோனேசியாவின் பாலி தீவில் அவர்கள் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இது குறித்து யுவராஜ் சிங் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஆமாம், எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஹேஸல் கீச் மூலம் எனக்கு ஆயுள் முழுவதும் தொடரும் நட்பு கிடைத்துள்ளது.

இது குறித்து இனி எந்த பேட்டியும் அளிக்க மாட்டேன். அவ்வளவு தான். நான் முக்கியமான சீசனில் உள்ளேன். அதனால் அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

யுவராஜும், ஹேஸலும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். ஆனால் யார் கவனத்தையும் ஈர்க்காமல் இருக்க காதலை ரகசியமாக வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 16, 2015, 14:07 [IST]
Other articles published on Nov 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+