மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களால் தேர்வு செய்யப்பட வில்லை.. அஸ்வின் விளக்கம்
Recommended Video

மும்பை:மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களால் தாம் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் தேர்வு செய்யப்படாமல் இருக்கிறார். அவர் தேர்வு செய்யப்படாதது குறித்து விளையாட்டு உலகில் பல கருத்துகள் நிலவி வந்தன.
இந் நிலையில் இதுகுறித்து அஸ்வின் முதன் முறையாக தமது மவுனத்தை கலைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:ஒரு நாள் போட்டியில் என்னுடைய செயல்பாடுகள் மோசமாக இருந்ததில்லை.

வாய்ப்பு கிடைக்கவில்லை
தற்போது மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களின் தேவை இந்திய அணிக்கு அதிகரித்துள்ளது. அதனால் எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

3 விக்கெட்டுகள் எடுத்தேன்
கடைசியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2017ல் விளையாடினேன். அப்போது அந்த போட்டியில் நான் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தேன்.

திரும்பி பார்ப்பது உண்டு
என்னுடைய முந்தைய ஆட்டங்கள் முடிந்த பின்னர் அவற்றை எப்போதுமே நான் திரும்பி பார்ப்பது உண்டு. அதைவைத்து பார்க்கும் போது தற்போது அணியின் தேவை காரணமாகவே நான் தேர்வு செய்யபடவில்லை.

இல்லை
அணிக்கு இப்போது நான் தேவைப்படுவனாக இல்லை. எனவே.. அதற்கும் என்னுடைய ஆட்டத் திறனிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications