Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சும்மா அவரோட என்னை கம்பேர் பண்ணாதீங்க..அவர் வேற… நான் வேற…! பொங்கிய விஜய் சங்கர்

மும்பை:எனக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே எவ்வித போட்டியும் இல்லை என்று விஜய் சங்கர் கூறி இருக்கிறார்.

உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்திய அணியும் இங்கிலாந்து புறப்பட்டு சென்றிருக்கிறது. இந் நிலையில், ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் இந்திய அணி குறித்தும் ஹர்திக் பாண்ட்யா குறித்தும் சில முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

I am not compete with hardik pandya, vijay shankar explains

அவர் கூறியிருப்பதாவது: ஹர்திக் பாண்ட்யாயுடன் நான் போட்டி போட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எங்களின் ஆட்டத் திறன் வேறு. பாண்டியா அதிரடி ஆட்டக்காரர். எனவே எங்களுக்குள் எந்த வித போட்டியும் கிடையாது.

எங்கள் அனைவரின் நோக்கம் எல்லாம் இந்திய அணி கோப்பையை வென்று சாம்பியனாக வேண்டும் என்பதாகும். எனது சிறுவயது பயிற்சியாளரிடம் விவாதித்து இருக்கிறேன். அவர் பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

கொஞ்சம் அமைதியான சுபாவம் கொண்டவன் நான். ஏதாவது சந்தேகம் என்றால், தயங்காமல் தோனி, கோலியிடம் ஆலோசனை கேட்பேன். அவர்களும் எனக்கு ஆலோசனை வழங்குவார்கள் என்றார்.

உலக கோப்பை இந்திய அணியில், தமிழக வீரர் விஜய் சங்கர் விளையாடுகிறார். ஆல் ரவுண்டரான அவர், 4வது இடத்தில் களமிறங்குவார் என்று தெரிகிறது. ஆனால் 4-வது வீரருக்கான ரேசில் விஜய் சங்கர் மற்றும் கே.எல்.ராகுலும் உள்ளனர்.

Story first published: Wednesday, May 22, 2019, 18:20 [IST]
Other articles published on May 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+