Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் ஒன்னும் ரோபோ கிடையாது... எனது தோலை சீவினாலும் ரத்தம்தான் வரும்... விராத் கோஹ்லி ஆவேசம்

கொல்கத்தா : தான் ஒன்றும் ரோபோ கிடையாது என்றும் தனது தோலை சீவினாலும் ரத்தம்தான் வரும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்தார்.

இந்தியா- இலங்கை இடையே இன்று முதல் டெஸ்ட் போட்டிகள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறுகிறது. இதையொட்டி கோஹ்லி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஹர்திக் பாண்ட்யா முதல் இரு தொடர்களில் விளையாடாமல் ஓய்வில் இருப்பது குறித்து கோஹ்லியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கோஹ்லி பதிலளிக்கையில், களத்தில் நீண்ட நேரம் விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு என்பது தேவை.

 40 போட்டிகளில்...

40 போட்டிகளில்...

சில நேரங்களில் எங்களது சூழ்நிலைகளை அனைவரும் புரிந்து கொள்வதில்லை. வேலைப்பளு காரணமாக ஒரு வீரருக்கு ஓய்வு தேவையா அல்லது வேண்டாமா என்பது குறித்து வெளியே ஏராளமான பேச்சுகள் ஓடி கொண்டிருக்கின்றன. ஒரு ஆண்டுக்கு 40 போட்டிகளில் வீரர்கள் விளையாடுகின்றனர்.

 எல்லா வீரர்களும்

எல்லா வீரர்களும்

3 பேர் ஓய்வெடுத்தால், அந்த பணிச்சுமைகள் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. போட்டியில் 11 பேர் விளையாடினாலும் ஒரு நாள் போட்டியில் எல்லா வீரர்களும் 45 ஓவர்கள் வரை நின்று விளையாடுவதில்லை.

 சிலருக்குத் தெரியாது

சிலருக்குத் தெரியாது

டெஸ்ட் போட்டியில் 30 ஓவர்கள் வரை யாரும் பந்து வீசுவதில்லை. நீண்ட நேரம் விளையாடும் வீரர்களின் உடல் பழைய நிலைக்குத் திரும்ப அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இவர்கள் ஆண்டுக்கு 40 விளையாட்டுகள் மட்டுமே விளையாடுகின்றனர் என்று சிலர் நினைப்பர். ஆனால் வீரர்கள் களத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.

 என்ன சூழ்நிலை

என்ன சூழ்நிலை

விக்கெட்டுகளுக்கு இடையே எத்தனை ரன்கள் ஓடுகின்றனர், பல்வேறு சூழல்களில் எத்தனை ஓவர்கள் பந்து வீசுகின்றனர், என்னென்ன நிலைமை, எந்த வகையான கால நிலை, வீரர்களின் உடல் ஒத்துழைக்குமா இல்லையா என்பதையெல்லாம் யாரும் ஆராய்ச்சி செய்வதில்லை.

 ஒப்பிட முடியாது

ஒப்பிட முடியாது

ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் போது எதற்காக வீரர்கள் ஓய்வெடுக்கின்றனர் என்று நினைக்கிறார்கள். எல்லா விளையாட்டுகளிலும் எல்லாரும் ஒரே மாதிரியான உடல் உழைப்பை பெறுவதில்லை. உதாரணமாக, புஜாரா களத்தில் நீண்ட நேரம் செலவிட்டதால் டெஸ்ட் போட்டிதளின் போது அவரால் அதிகப்பட்சமான உடல் உழைப்பை கொடுக்க முடிகிறது. இதை நீங்கள் மற்ற வீரர்களுடன் ஒப்பிட முடியாது ஏனெனில் அவர்களின் உடல் உழைப்பு குறைவு.

 எனது தோலை சீவினாலும் ரத்தம் வரும்

எனது தோலை சீவினாலும் ரத்தம் வரும்

இதெல்லாம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன். எனக்கும் கண்டிப்பாக ஓய்வு தேவை. எனக்கு ஏன் தேவைப்படாதா ? எனக்கு ஓய்வு வேண்டும் என்று நான் நினைத்தால் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதை கேட்பேன். எப்போதும் விளையாடிக் கொண்டிருக்க நான் ஒன்றும் ரோபோ இல்லை. எனது தோலை சீவினாலும் ரத்தம்தான் வரும். எனவே ஓய்வு என்பது அனைவருக்கும் தேவை என்று கோஹ்லி தெரிவித்தார்.

Story first published: Thursday, November 16, 2017, 8:50 [IST]
Other articles published on Nov 16, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+