Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாட்டுக்காக நான் ஆடலை..! ஏதோ ஒரு பேஷனுக்காக விளையாடுறேன்..! உண்மை பேசிய தமிழக வீரர்

சென்னை: நாட்டுக்காக ஆடவில்லை, ஆர்வம், ஒரு மனதிருப்திக்காக தான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன் என்று தமிழக வீரர் முரளி விஜய் கூறி இருக்கிறார்.

தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக 17 ஒருநாள் போட்டிகளிலும், 61 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியவர். ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முக்கிய வீரராக முரளி விஜய் இருக்கிறார்.

முரளி விஜய் இங்கிலாந்து கவுன்டி அணியான சோமர்செட் அணியில் இடம் பிடித்துள்ளார். காயம், ஆட்டத்திறன் குறைபாடு காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டவர். அண்மையில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, மீண்டும் பார்முக்கு திரும்பி இருக்கிறார்.

சோமர்செட் அணி

சோமர்செட் அணி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் முரளி விஜய் இடம்பெறவில்லை. இந்நிலையில், நடப்பு சீசனில் 3 போட்டிகளுக்காக சோமர் செட் அணியில் விளையாட பாகிஸ்தான் வீரர் அசார் அலிக்கு பதிலாக ஒப்பந்தமாகியுள்ளார்.

பேஷனுக்காக ஆட்டம்

பேஷனுக்காக ஆட்டம்

எனக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும். ஆர்வம் மற்றும் பெருமைக்காக தான் கிரிக்கெட் ஆடுகிறேன். மிகப்பெரிய பங்களிப்பை எனது போட்டிகளில் கொடுத்து வருகிறேன். எந்த அணியாக இருந்தாலும் எனது பங்களிப்பை சிறப்பாக கொடுப்பேன்.

ரோகித் விளையாடுவார்

ரோகித் விளையாடுவார்

அணியை விட யாரும் சிறந்தவர்கள் அல்ல. அது கேப்டன் விராட் கோலியா இல்லையா என்பது அல்ல. யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ரோகித் சர்மா அணிக்காக மட்டுமல்லாமல் நாட்டிற்காக விளையாடுவார்.

எதிர்பார்க்கிறேன்

எதிர்பார்க்கிறேன்

என்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் விளையாட்டில் இதை தான் செய்தேன். இதனால் எந்த மாற்றமும் நிகழாது என்பது நன்றாகவே தெரியும். ஆனால் வாய்ப்பு தான் ஒரு சிறந்த அனுபவத்தை தரும், அதை தான் எதிர்பார்க்கிறேன் என்றார்.

Story first published: Saturday, August 31, 2019, 22:04 [IST]
Other articles published on Aug 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+