For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து மீது சற்றும் இரக்கமே இல்லாமல் பேசுகிறாரே மெக்ராத்!

மும்பை: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான எதிர் வரும் ஆஷஸ் தொடரில் 5-0 என்ற கணக்கி் ஆஸ்திரேலியா அபாரமான வெற்றியைப் பெறும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சு புயல் கிளன் மெக்ராத் கூறியுள்ளார்.

நிச்சயம் இந்தத் தொடரில் இங்கிலாந்தால் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாது என்றும் மெக்ராத் அடித்துக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே வருடா வருடம் நடைபெறும் டெஸ்ட் தொடர்தான் இந்த ஆஷஸ் தொடர். ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் தொடர் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மெக்ராத் பிடிஐக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்....

வெளுத்துருவோம்

வெளுத்துருவோம்

இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய மண்ணில் காண ஆர்வமாக உள்ளேன். 5-0 என்பது எனது கணக்கு. ஆனால் அதில் மாற்றம் உண்டு. அதாவது 10-0 என்று இப்போது கணித்துள்ளேன்.

போன டூரையும் சேர்த்து

போன டூரையும் சேர்த்து

கடந்த தொடரின்போது 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றிருந்தது. எனவே இந்த முறையும் சேர்த்தால் அது 10-0 என்றாகி விடும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அட்டகாசமாக ஆடுகிறார்கள்

அட்டகாசமாக ஆடுகிறார்கள்

ஆஸ்திரேலிய அணியினர் அபாரமாக ஆடி வருகிறார்கள். மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகி்றார்கள். இங்கிலாந்திடம் நம்பிக்கை மட்டுமே உள்ளது. உலகக் கோப்பையில் அது பரிதாபமாக வெளியேற்றப்பட்டது.

கடுமையாக மோதனும்

கடுமையாக மோதனும்

ஆஸ்திரேலியாவுடன் மோத விரும்பும் அணிகள் கடுமையான மோதலுக்குத் தயாராக இருக்க வேண்டும். மிகச் சிறந்த போட்டியாக அவை மாறும். ஒவ்வொரு போட்டியையும் ஆஸ்திரேலியர்கள் சவாலாக எடுத்துக் கொள்வதால்தான் வெல்கின்றனர்.

இங்கிலாந்தில் ஓகே

இங்கிலாந்தில் ஓகே

இங்கிலாந்து அணி அங்கு சிறப்பாக விளையாடுகிறது. அதில் சந்தேகமே இல்லை. தற்போது அவர்கள் நியூசிலாந்தில் முகாமிட்டுள்ளனர்.. முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாகவே ஆடுகின்றனர். நியூசிலாந்தும் கூட சிறப்பாகவே விளையாடுகிறது.

மிட்சல் சூப்பரப்பு

மிட்சல் சூப்பரப்பு

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் மிட்சல் ஜான்சன் தலைமையில் பிரமாதமாக பந்து வீசி வருகிறார்கள். நல்ல நல்ல வேகப் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவிடம் உள்ளனர் என்றார் மெக்ராத்.

Story first published: Monday, June 1, 2015, 18:35 [IST]
Other articles published on Jun 1, 2015
English summary
Pace legend Glenn McGrath, who has often predicted results of Australia's Test rubbers, today forecast yet another 5-0 cleansweep by his country against England in the upcoming Ashes series. "I am looking forward to the Ashes. I had been predicting 5-0, but I have changed my prediction. I am now predicting 10-0 because Australia is already 5-0 up from the last tour," was the ex-fast bowler's tongue-in-cheek response to a query from PTI here today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+