Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கும் குடும்பம் இருக்கு.. கண்டதையும் பேசாதீங்க.. பண்டியாவுடனான காதல் வதந்தி.. மனம் திறந்த நடிகை!

மும்பை : தன்னையும் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவையும் இணைத்து மீடியாவிலும் யூ-டியூபிலும் கண்டதையும் ஒளிபரப்ப வேண்டாம் என்று பாலிவுட் நடிகை ஊர்வசி ராட்டெலா கேட்டுக் கொண்டுள்ளார்.

தான் தற்போது சிங்கிள் தான் என்று தெரிவித்துள்ள ஊர்வசி, தற்போது தன்னுடைய வேலையில் தான் கவனம் செலுத்துவதாகவும் ஹர்திக்கும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரது காதல் குறித்து பல்வேறு யூகங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ள நிலையில், சமூக வலைதளத்தில் நாய்க்குட்டி ஒன்றுடன் ஊர்வசி பகிர்ந்துள்ள புகைப்படம், மீண்டும் பல்வேறு யூகங்களுக்கு இடம் அளித்துள்ளது. அந்த நாய்க்குட்டியை ஹர்திக் அவருக்கு பரிசளித்துள்ளதாக கணிப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

 பாலிவுட் நடிகையுடன் காதல்?

பாலிவுட் நடிகையுடன் காதல்?

இந்திய கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக செயல்பட்டுவரும் ஹர்திக் பாண்டியா, பாலிவுட் நடிகை ஊர்வசி ராட்டெலாவுடன் காதல் கொண்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

 செய்திகளில் தொடர்ந்து இடம்பிடிப்பு

செய்திகளில் தொடர்ந்து இடம்பிடிப்பு

முன்னதாக மும்பையில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் இந்த ஜோடி சேர்ந்து பங்கேற்ற நிலையில், இவர்கள் அடிக்கடி செய்திகளில் குறிப்பாக யூ-டியூப் செய்திகளில் இடம்பெறுகின்றனர்.

 மீண்டும் பற்றிய பரபரப்பு தீ

மீண்டும் பற்றிய பரபரப்பு தீ

இந்நிலையில் சமூக வலைதளத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி, நாய்க்குட்டி ஒன்றுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதையடுத்து, ஹர்திக் பாண்டியா மற்றும் ஊர்வசி குறித்து அடங்கியிருந்த செய்திகள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இந்த நாய்க்குட்டி, ஊர்வசி, நடித்துள்ள பகல்பந்தி திரைப்படத்தில் அவரது நடிப்பை பாராட்டி ஹர்திக் பாண்டியா பரிசளித்தது என்று செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

 ஊர்வசி விளக்கம்

ஊர்வசி விளக்கம்

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஊர்வசி, தான் சிங்கிள் தான் என்று தெரிவித்துள்ளார். தான் தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் ஹர்திக்கையும் தன்னுடைய கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஊடகங்களுக்கு கோரிக்கை

ஊடகங்களுக்கு கோரிக்கை

தன்னையும் ஹர்திக் பாண்டியாவையும் இணைத்து கண்டதையும் ஒளிபரப்ப வேண்டாம் என்று மீடியா மற்றும் யூ-டியூப் செய்தி நிறுவனங்களை ஊர்வசி கேட்டுக் கொண்டுள்ளார்.

 அவர்களின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்

அவர்களின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்

தனக்கும் குடும்பம் உண்டு என்று கூறியுள்ள ஊர்வசி ராட்டெலா, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, December 1, 2019, 17:19 [IST]
Other articles published on Dec 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+