கொலை வெறியுடன் இருக்கேன்..! உலக கோப்பை இந்த முறை எங்களுக்கு தான்…! யாருப்பா…? அது
லண்டன்:உலக கோப்பை தொடருக்காக, கொலை வெறியுடன் காத்திருப்பதாக தென் ஆப்ரிக்க வீரர் ஹசீம் ஆம்லா தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட நெருங்கியே விட்டது. அணிகளும் தயார்... ஆட்டத்தை காண ரசிகர்களும் தயார். அந்தளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது உலக கோப்பை கிரிக்கெட் 2019.
யாருக்கு கோப்பை என்பதை யாரும் உறுதிப்படுத்த முடியாது. அதற்கு சரியான உதாரணம் தென் ஆப்ரிக்கா அணி தான். ஒவ்வொரு முறையும் கோப்பையை வெல்லும் என்று அணி கணிக்கப்படுவதும்.. பின்பு தோல்வி அடைந்து நடையை கட்டுவதும் அந்த அணி இதுவரை சந்தித்தது.

கடந்த கால வரலாறு
திறமையான அணி, அருமையான ஒருங்கிணைப்பு என பல ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும்... என்னவோ ஏதோ ஒரு கட்டத்தில் தோற்று ரசிகர்களின் கண்ணீருடன் விடை பெற்று சென்றிருக்கிறது. இது தான் அந்த அணியின் கடந்த கால உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு.

ஹசீம் ஆம்லா கருத்து
ஆனால்...இந்த முறை வச்ச குறி தப்பாது என்ற ரேஞ்சுக்கு மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர் தென் ஆப்ரிக்க வீரர்கள். அதற்கு ஒரே சாட்சி அந்த அணியின் அதிரடி வீரர் ஹசீம் ஆம்லா. அவர் கூறியிருப்பதாவது:

கொலை வெறியில் வீரர்கள்
தென் ஆப்ரிக்க அணிக்காக விளையாடும் வாய்ப்பு என்பது அதிர்ஷ்டம். ஆகையால் உலக கோப்பை தொடரில் சாதிக்க வேண்டியது ரொம்ப அவசியம். முன்பு எப்போதும் இல்லாத அளவு, இந்த முறை நான் உட்பட அனைத்து தென் ஆப்ரிக்க வீரர்கள் அனைவரும் கொலை வெறியுடன் இந்த தொடருக்காக காத்திருக்கிறோம் என்றார்.

அதிர்ஷ்டம் இருக்கிறதா?
அவரின் இந்த கொலை வெறி எந்தளவுக்கு களத்தில் இருக்கும்... எதில் போய் முடியுமோ என்று தெரியவில்லை. ஆட்டம் அவர்களுக்கு கை கொடுத்தாலும்... அந்த அதிர்ஷ்டம் என்பது அந்த அணிக்கு கை கொடுக்குமா என்பது தெரியவில்லை. எப்படியும் தெரியத் தான் போகிறது.... அது வரை காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications