Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பிசிசிஐ நியாயமின்றி செயல்பட்டது”.. தோனி முதல் அதிகாரிகள் வரை.. ஹர்பஜன் சிங் சரமாரி குற்றச்சாட்டு!

மும்பை: பிசிசிஐ அதிகாரிகள் தங்களது பணியை சரியாக செய்யவில்லை என முன்னாள் ஹர்பஜன் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங், சமீபத்தில் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேல் வாய்ப்புக்காக காத்திருந்த ஏமாந்த ஹர்பஜன், தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

400 விக்கெட்களுக்கும் மேல் வீழ்த்தி சாதனை படைத்த ஹர்பஜனுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்ற வருத்தம் உள்ளது. அதன் வெளிப்பாடாய் சமீபத்தில் தோனி மீது குற்றம் சாட்டியிருந்தார். அதில், தனக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என தோனியிடம் பல முறை கேட்டதாகவும், ஆனால் அவர் கேப்டனாக எதையுமே கண்டுக்கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

தோனி மனைவி அல்ல

தோனி மனைவி அல்ல

இந்நிலையில் தற்போது தோனியுடன் சேர்த்து பிசிசிஐ மீதும் தனது புகாரை தொடுத்துள்ளார். தோனியுடனான உங்களின் புரிதல் என்ன, உறவு எப்படி இருந்தது என ஹர்பஜனிடம் கேட்கப்பட்டது. தோனி எனக்கு நல்ல நண்பர். எனினும் அவரை சமாதானப்படுத்த நான் ஒன்னும் தோனியின் மனைவி அல்ல எனக்கூறினார்.

வீரர்கள் தேர்வில் குளறுபடி

வீரர்கள் தேர்வில் குளறுபடி

தொடர்ந்து பேசிய அவர், தோனியுடன் எனக்கு தனிப்பட்ட பகையில்லை. 2012ம் ஆண்டுக்கு பிறகு சில தவறுகள் நடந்துள்ளது என்று தான் கூறுகிறேன். 2011ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணி மீண்டும் ஒருமுறை கூட சேர்ந்து விளையாடவில்லை. யுவராஜ் சிங், கம்பீர் போன்றோர் ஐபிஎல்-ல் சிறப்பாக விளையாடியபோதும் இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் என்னதான் காரணம், யார் காரணம்?

அரசாங்கம் போல் பிசிசிஐ

அரசாங்கம் போல் பிசிசிஐ

பிசிசிஐ தான் எங்களை ஒன்று சேரவிடவில்லை. பிசிசிஐ மீது தான் எனக்கு கோபம். என்னைப்பொறுத்தவரை பிசிசிஐ, ஒரு அரசாங்கம் போல் நடந்துக்கொள்கிறது. தேர்வுக்குழு அதிகாரிகள் அந்த சமயத்தில், நியாயமாக நடந்துக்கொள்ளவில்லை. மிகச்சிறந்த வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஃபார்மில் இருந்த போதும் ஏன் புது வீரர்களை கொண்டு வர வேண்டும்.

பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ விளக்கம்

இதுகுறித்து நான் நேரடியாக பல முறை கேட்டுவிட்டேன். ஆனால் தேர்வுக்குழு எங்கள் கையில் ஒன்றும் இல்லை எனக்கூறினர். இப்படி பதில் கூறுவதற்கு அவர்கள் ஏன் தேர்வுக்குழு அதிகாரிகள் என்ற பதவியில் இருக்கிறார்கள்? என ஹர்பஜன் சரமாரியாக குற்றச்சாட்டை வீசியுள்ளார்.

Story first published: Monday, January 31, 2022, 18:27 [IST]
Other articles published on Jan 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+