Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தண்ணி கேன் போட வந்தேங்க.. 5 நிமிஷத்துக்கு முன்னாடி டிராவிட் தான் சொன்னாரு.. உளறிய குட்டி கோலி!

கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்பில்லை என்பதால் கிட் பேக்கை கூட கொண்டு வரவில்லை என்றும், கடைசி 5 நிமிடத்தில் தான் ராகுல் டிராவிட் பிளேயிங் லெவனில் இருப்பதாகவும் கூறியதாகவும் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் மிகச்சிறந்த கம்பேக்கை கொடுத்துள்ளார். ரிசர்வ் டே ஆட்டம் தொடங்கியதில் இருந்து வேறு லெவல் ஆட்டத்தில் வெளிப்படுத்திய கேஎல் ராகுல், 40 ரன்களுக்கு மேல் அதிரடிக்கு திரும்பினார். அதேபோல் ஹாரிஸ் ராஃப் பந்துவீசாததால் அவருக்கு பதில் வந்த இஃப்திகார் அஹ்மத்தை பிரஷர் செய்ததிலும் கேஎல் ராகுலின் பங்கு அதிகம் இருந்தது.

I Came to the Stadium with a thought of carrying drinks in the Pakistan Match says KL Rahul after the century

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் விளாசியது தொடர்பாக கேஎல் ராகுல் பேசுகையில், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக நிச்சயம் பிளேயிங் லெவனில் இருக்க மாட்டேன் என்பது தெரியும். அதனால் வீரர்களுக்கு தண்ணீர் மட்டும் களத்திற்கு செல்ல தயாராக இருந்தேன். அதனால் கிட் பேக்கை ஹோட்டலில் இருந்து கொண்டு வரவில்லை. அதன்பின் திடீரென பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய பிளேயிங் லெவனில் இருப்பதாக ஆட்டம் தொடங்குவதற்கு 5 நிமிடங்கள் முன்பாக கூறினார்.

அப்போது தான் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகு பிடிப்பு ஏற்பட்டது தெரிந்தது. பின்னர் இந்திய அணி மேனேஜர் உடனடியாக ஹோட்டல் சென்று எனது கிட் பேக்கை கொண்டு வந்தார். இதுபோல் ஐபிஎல் தொடரின் போதும் எனக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் ஃபிட்னஸ்-க்காக மட்டுமே 3 மாதங்கள் செலவிட்டுள்ளேன். என்சிஏ நிர்வாகிகளுக்கும், ஊழியர்களுக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன். விக்கெட் கீப்பிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால், கூடுதலாக தயாராகவே இருந்தது.

கடந்த 10 நாட்களில் மட்டும் இருமுறை யோயோ டெஸ்டில் பங்கேற்றுள்ளேன். இரு பயிற்சி போட்டிகளில் விளையாடி ஃபிட்னஸை நிரூபித்துள்ளேன். இந்த போட்டியில் களமிறங்கிய முதல் 15 முதல் 20 நிமிடங்கள் பதற்றமாக தான் இருந்தது. அதன்பின் இரு பவுண்டரிகள் விளாசிய பின் எனது ஆட்டம் மட்டுமே கவனத்தில் இருந்தது. அதேபோல் கம்பேக் போட்டியிலேயே சதம் விளாசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் இனி நான் எதைப் பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, September 12, 2023, 15:13 [IST]
Other articles published on Sep 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+