இந்தூர்: இந்தியா- நியூசிலாந்து நடுவேயான 3வது டெஸ்ட்டில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

81 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 20வது முறையாக 5 அல்லது அதற்கு மேலான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் அஸ்வின் கூறியது: நல்ல ரிதம் இருந்தால், உலகின் எந்த ஒரு பேட்ஸ்மேனையும் என்னால் வீழ்த்த முடியும். ரிதம் வந்துவிட்டால் அன்றைய தினம் சிறப்பாக என்னால் பந்து வீச முடியும். அதை நோக்கிதான் எனது முயற்சிகள் இருக்கும். இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.