நானும், தோனியும் ஒண்ணா..? செக் பண்ணிட்டேன்..! இந்த தம்பியின் அக்கப்போர் ஆசையை பாருங்க..!!
Recommended Video
டெல்லி: தோனியின் போட்டியாளர் என்பதை விட அவரிடமிருந்து நிறைய கற்று கொள்ளவே விரும்புவதாக இளம் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் தெரிவித்து உள்ளார்.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட். டெஸ்ட் அரங்கில் சமீபத்தில் முன்னாள் வீரர் தோனியின் சாதனையை சாய்த்தார். தோனியை விட சாதனை மிகுந்த வீரராக அவர் வருவார் என்று பலரும் கணிப்புகளை கூறி வருகின்றனர்.
அண்மையில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில், தோனி இல்லாத நிலையில் களமிறங்கிய பன்ட், டி 20 தொடரில் முதலிரண்டு போட்டியில் சொதப்பினார். ஆனால் கடைசி போட்டியில் அரைசதம் விளாசி, ஓரளவு தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்.

பலமுறை ஒப்பீடு
பிறகு நடந்த ஒருநாள் தொடரில் மீண்டும் சொதப்பி தள்ளினார். அடுத்து தென் ஆப்ரிக்கா தொடரில் கலக்க காத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: தோனியுடன் பல முறை ஒப்பீடு செய்திருக்கிறேன்.

தோனி ஆக முடியாது
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது மிகவும் கடினமான ஒன்று. அவரிடம் இருந்து தற்போது பல விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். யாராலும் ஒரே ராத்திரியில், ஒரே போட்டியில் தோனி ஆக முடியாது.

நெருக்கடி தருணங்கள்
அவர் என் ஆலோசகர். பல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளார். குறிப்பாக நெருக்கடியான தருணங்களை எப்படி கையாள்வது என்பதை கற்றுக் கொடுத்து உள்ளார்.

என் முதல் இலக்கு
இந்த 21 வயதில் தோனி இடத்தை பூர்த்தி செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம் தான். தற்போதைக்கு என் தகுதிக்கு ஏற்ப சிறப்பான முறையில் விளையாட விரும்புகிறேன். சீனியர் வீரர்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்வதே முதல் இலக்கு என்றார்.


Click it and Unblock the Notifications