Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவுக்கு உலக கோப்பையை பெற்று தர முடியாது: டி வில்லியர்ஸ் விரக்தி

ஆக்லாந்து: தனி ஒரு நபராக என்னால் மட்டும் உலக கோப்பையை வென்று அளிக்க முடியாது என்று விரக்தி வெளிப்படுத்தினார் தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ்.

பாகிஸ்தானுக்கு எதிராக இன்று ஆக்லாந்தில் நடந்த போட்டியில், 47 ஓவர்களில் 232 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது தென் ஆப்பிரிக்கா.

I can't win this World Cup for South Africa on my own, admits AB de Villiers

தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள், ஒருவர் பின் ஒருவராக நடையை கட்டினர். ஆம்லா, டு பிளெசிஸ் மட்டுமே ஓரளவுக்கு ரன் எடுத்தனர். கேப்டன் டி வில்லியர்ஸ் கடுமையாக போராடி 77 ரன்கள் எடுத்து எதிர்பாராதவிதமாக அவுட் ஆனார். டி வில்லியர்ஸ் ஆடியதை பார்த்தால் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி உறுதி என்பதைப்போலவே இருந்தது. ஆனால், அவரது அவுட் போட்டியை புரட்டிப் போட்டது. டி வில்லியர்சுக்கு கம்பெனி கொடுக்காமல், வீணாக அடித்து ஆடி அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் அவுட் ஆனார்கள்.

போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் டி வில்லியர்ஸ் கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவில் ஆம்லா போன்ற உலக தரம்மிக்க பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் எல்லோரும் சிறப்பாக ஆடினால்தான், கோப்பையை வெல்ல முடியும். நான் மட்டுமே சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல முடியும் என்று யாராவது கூறினால் அதை நானே நம்ப மாட்டேன்.

ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதுதான் தென் ஆப்பிரிக்க அணிக்கு தற்போதுள்ள தேவையாகும். இவ்வாறு டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.

Story first published: Saturday, March 7, 2015, 17:06 [IST]
Other articles published on Mar 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+