Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.யை புரட்டி எடுத்த நட்டி.. நடராஜனால் ஆடிப்போன டேவிட் வார்னர்.. என்ன சொன்னார் தெரியுமா?

சிட்னி : கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பௌலர் நடராஜனின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது.

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நடராஜனுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பே அவர் தன்னை நிரூபிக்க காரணமாக இருந்தது.

இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர், நட்டுவின் பௌலிங் செயல்பாடுகளை பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

டி20 தொடர்... 6 விக்கெட்டுகள்

டி20 தொடர்... 6 விக்கெட்டுகள்

தற்போதைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களின் நாயகனாக போற்றப்படுபவர்களில் பௌலர் நடராஜனும் ஒருவர். பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் மட்டுமே அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பாதையை ஏற்படுத்திய தொடர்

பாதையை ஏற்படுத்திய தொடர்

நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 தொடர் நடராஜனுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் அவரது சிறப்பான பாதையை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்காக விளையாடிய நடராஜன் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு, தனது அணியின் பல்வேறு வெற்றிகளிலும் கைகொடுத்தார்.

நடராஜனுக்கு பாராட்டு

நடராஜனுக்கு பாராட்டு

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். டி20 தொடரை கைவிட்ட நிலையில் நடராஜன் குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் சிறப்பான வீரர் என்றும் கூறியுள்ளார்.

சிறப்பான சாதனை

சிறப்பான சாதனை

வெற்றியோ தோல்வியோ சக வீரருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள வார்னர், நடராஜன் தன்னுடைய விளையாட்டை மிகவும் விரும்புவதாகவும், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அவரது சாதனை சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, வார்னரின் இந்த பதிவை சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது.

Story first published: Wednesday, December 9, 2020, 20:40 [IST]
Other articles published on Dec 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+