உலகக் கோப்பையை வென்ற பிறகு நானும், அணியினரும் ஒரே அழுகை: டோணி
டெல்லி: 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு கேப்டன் டோணி, சச்சின் உள்பட மொத்த அணியும் அழுதுள்ளது.
1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. அதன் பிறகு உலகக் கோப்பை என்பது இந்திய கிரிக்கெட் அணிக்கு எட்டாகனியாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் தான் 2011ம் ஆண்டு டோணி தலைமையிலான அணி உலகக் கோப்பையை வென்று நம் நாட்டுக்கு பெருமை சேர்த்தது.

டோணி
விமல் குமார் எழுதிய தி கிரிக்கெட் பானடிக்ஸ் எசென்ஷியல் கைட் புத்தகத்தில் டோணி கூறியிருப்பதாவது, உலகக் கோப்பையை வென்ற பிறகு நான் அழுவேன் என்று நினைக்கவே இல்லை. ஆனால் அழுதேன் என்று தெரிவித்துள்ளார்.

ஒரே அழுகை
உலகக் கோப்பையை வென்ற பிறகு உடை மாற்றும் அறையில் அனைவரும் அழுதனர். அனைவரும் என்றால் அணியில் இருந்த 15 வீரர்கள், உதவியாளர்கள், அணியுடன் தொடர்புடைய அனைவரும் அழுதனர் என்று டோணி அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

வீடியோ
நான் எல்லாம் அழுவேன் என்று நினைக்கவில்லை, ஆனால் அனைவருடன் சேர்ந்து அழுதேன். அந்த வீடியோ இல்லாததால் அதை உலக மக்கள் பார்க்க முடியாது என்று டோணி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்
இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் வரும் 14ம் தேதி துவங்கி மார்ச் 29ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. வரும் 15ம் தேதி நடக்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications