For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Dwayne Bravo: நான் ரஜினிகாந்த் படத்தை பாக்கல.. ஆனா அவரை பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு

Recommended Video

ரஜினியை பிடிக்கும்... சீக்கிரமே தமிழில் ட்வீட் போடுவேன்... பிராவோ கலக்கல்

சென்னை: ரஜினிகாந்த் நடித்த படங்களை நான் பார்த்தது இல்லை. ஆனால் அவரை சந்திக்க விரும்புகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ கூறியிருக்கிறார்.

ஐபிஎல் அணிகளில் மிகவும் ஜாலியான அணி என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் தான். களத்தில் துடிப்புடனும், ஓய்வு நேரங்களில் ஜாலியாகவும் அந்த அணியின் வீரர்கள் இருந்து வருகின்றனர். திடீரென்று நான் பாஜிடா என்று தமிழில் டுவிட்டர் பதிவிட்டு பொங்குவார் தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்.

களத்தில் கைகளை பறவை போல் வைத்துக் கொண்டு விக்கெட் எடுத்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பார் இம்ரான் தாஹிர். சென்னை தெருக்களில் திடீர் என ஆஜராவார். டிஜேவாக மாறி பாடுவார்.. ஆடுவார் பிராவோ. இசை, நடனம் என கலக்கும் பிராவோ... சென்னையில் செல்லப்பிள்ளையாக மாறிவிடுவார் போல.

இசையை விரும்புவர்

இசையை விரும்புவர்

மேற்கிந்திய தீவுகளின் வீரர் பிராவோ. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நீண்ட காலமாக அவர் சென்னை அணியில் விளையாடி வருவதால் அங்குள்ள கலாச்சாரம், உணவு வகைகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். மேலும் பிராவோ ஒரு இசைப்பிரியர். நடனம் ஆடுவதிலும் வல்லவர்.

ரஜினியை சந்திக்க வேண்டும்

ரஜினியை சந்திக்க வேண்டும்

அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் ரஜினிகாந்தை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் நான் அவரது ஒரு படத்தை கூட இதுவரை நான் பார்க்கவில்லை.

பாடகரான பிராவோ

பாடகரான பிராவோ

விரைவில் அந்த படங்களை பார்ப்பேன். ரஜினிகாந்தை சந்திக்க நான் விரும்புகிறேன். என்றாவது ஒரு நாள் சந்திக்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன். ஏற்கனவே ‘சித்திரம் பேசுதடி 2' என்ற தமிழ் படத்தில் பாடி இருக்கிறேன். அது தமிழில் எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பாகும்.

டுவிட் செய்வேன்

டுவிட் செய்வேன்

அந்த பாடல் இன்னும் எனக்குள் இருக்கிறது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் பாடுவேன். தமிழ் படத்தில் நான் நடிப்பதற்கான பணியில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் ஆகியோர், தமிழில் ‘டுவிட்' செய்வதுபோல் நானும் விரைவில் தமிழை கற்றுக்கொண்டு டுவிட் செய்வேன் என்றார். நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. அந்த போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 5, 2019, 17:22 [IST]
Other articles published on May 5, 2019
English summary
I’d like to meet Rajinikanth: Dwayne Bravo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+