Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது சத்தியம்..! அந்த ஓவர் த்ரோ பவுண்டரி வேண்டாம்னு சொல்லவே இல்லை.. நேர்மைன்னா இவர்தான்.. !!

லண்டன்: உலக கோப்பை பைனலில் ஓவர் த்ரோ ரன் வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை என்று பென் ஸ்டோக்ஸ் கூறியிருக்கிறார்.

உலக கோப்பை இறுதிப் போட்டியின்போது இங்கிலாந்து அணிக்கு நடுவர் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போட்டிக்கு பிறகு இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்சன் பேசினார்.

பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் சென்று தங்களுக்கு ஓவர் த்ரோ மூலம் கிடைத்த அந்த 4 ரன்கள் தேவையில்லை. அதை திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிவித்திருந்தார்.

நேயர்கள் கேள்வி

நேயர்கள் கேள்வி

இந் நிலையில் பிபிசி வானொலி நிகழ்ச்சியில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்றார். அப்போது அவரிடம் நேயர்கள் தரப்பில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஸ்டோக்சிடம் ஓவர் த்ரோ மூலம் கிடைத்த பவுண்டரியை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

மனசாட்சி

மனசாட்சி

அதை கேட்டு அதிர்ச்சியடைந்தார் பென் ஸ்டோக்ஸ். தொடர்ந்து பேசியதாவது: நான் நடுவரிடம் சென்று ஓவர் த்ரோ பவுண்டரியை ரத்து செய்ய கோரினேனா? மன சாட்சிக்கு துரோகம் இல்லாமல் சொல்கிறேன்.

நடுவரிடம் பேசவில்லை

நடுவரிடம் பேசவில்லை

அப்போது நடந்த அனைத்தையும் நான் பார்த்து கொண்டிருந்தேன். அதே நேரத்தில் என்னை பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் எப்படி நடுவரிடம் பேசியிருக்க முடியும்?

மன்னிப்பு கோரினேன்

மன்னிப்பு கோரினேன்

பந்து பேட்டில் பட்டு பவுண்டரிக்கு போனவுடன் நான் எனது மார்பில் கை வைத்து மன்னிப்பு கோரினேன். நடுவரிடம் சென்று பேசவில்லை. அந்த சமயத்தில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் லாதம், கேப்டன் வில்லியம்சனிடம் மன்னித்து விடுங்கள் என்று தான் கேட்டேன் என்றார்.

Story first published: Wednesday, July 31, 2019, 20:12 [IST]
Other articles published on Jul 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+