ஆமா... வேர்ல்டு கப்புல ஒழுங்கா ஆடல..! ஒத்துக்கொண்ட இந்திய ஆல் ரவுண்டர்.. ஆனா என்ன பிரயோசனம்?
திண்டுக்கல்: இளம்வீரர்களை ஊக்குவிக்கும் தளமாக டிஎன்பிஎல் தொடர் திகழ்கிறது என்ற ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ், உலக கோப்பையில் தாம் சரியாக ஆடவில்லை என்றும் ஒத்துக் கொண்டார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் டிஎன்பிஎல் தொடர் தொடங்கி இருக்கிறது. முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளும் மோதின. போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் பங்கேற்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: இது போன்ற தொடர்கள் வீரர்களுக்கு மிகவும் உதவி கரமாக உள்ளது. அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேலும் ஊக்குவித்து அவர்களை ஐபிஎல், ராஞ்சி போன்ற தொடர்களில் இடம்பெற வைக்கிறது.
டிஎன்பிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து பவர்களுக்கு ஐபிஎல் அணியில் இடம்பெற அதிகபடியான வாய்ப்பு இருக்கிறது. டிஎன்பிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நாராயணன் ஜெகதீசன் சென்னை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்து வரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அவர் அணிக்கு பெருமை சேர்ப்பார். நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் நான் சரியாக விளையாட வில்லை, இருப்பினும் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை கற்று தருகிறது என்றார்.


Click it and Unblock the Notifications