Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் விரும்புன மாதிரி விளையாடலை... அஸ்வின் தான் காரணம்.. ஸ்மித் ஒப்புதல்

அடிலெய்ட் : இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான கடந்த 17ம் தேதி துவங்கிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இந்த போட்டியில் தான் விரும்பியபடி விளையாடவில்லை என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

முதல் இன்னிங்சில் இந்தியா அபாரம்

முதல் இன்னிங்சில் இந்தியா அபாரம்

கடந்த இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி பௌலிங்கில் ஸ்கெட்ச் வைத்து ஆஸ்திரேலியாவை தூக்கியது.

ஒரு ரன்னில் அவுட்டான ஸ்மித்

ஒரு ரன்னில் அவுட்டான ஸ்மித்

இதில் முக்கியமாக டேவிட் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தை ஒரு ரன்னில் தூக்கி சாதனை படைத்தார் ஸ்பின்னர் ஆர். அஸ்வின். இது அந்த அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

ஸ்மித் ஒப்புதல்

ஸ்மித் ஒப்புதல்

இந்நிலையில் முதல் இன்னிங்சில் தான் நினைத்தபடி விளையாடவில்லை என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும் அஸ்வின் உலக தரத்திலான பௌலர் என்றும் அவர் சிறப்பாக பந்து வீசினார் என்றும் ஸ்மித் கூறினார். அஸ்வின் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதை சுட்டிக் காட்டிய ஸ்மித், தன்னுடைய அவுட் குறித்து பேசுகையில் இதுபோல நடப்பதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

விராட்டிற்கு வாழ்த்து

விராட்டிற்கு வாழ்த்து

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்காக பேசிய ஸ்மித், முதல் இன்னிங்சில் விராட் கோலி சிறப்பான ஆஸ்திரேலிய பௌலிங்கின் கீழ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவரது விக்கெட் வீழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்தார். மேலும் அவருடைய குழந்தை பிறப்பிற்காக அவருக்கும் அனுஷ்காவிற்கும் வாழ்த்துக்களையும் கூறினார்.

Story first published: Tuesday, December 22, 2020, 13:59 [IST]
Other articles published on Dec 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+