Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை எங்களால் ஏன் தோற்கடிக்க முடியவில்லை என தெரியலையே: பாக். கேப்டன்

அடிலெய்ட்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் எங்களால் இந்தியாவை ஏன் தோற்கடிக்கவே முடியவில்லை என்று தெரியவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 14ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் நடந்தது. இதில் இந்தியா பாகிஸ்தானை ஆல் அவுட்டாக்கி 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை 6 முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியுள்ளன. 6 முறையும் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறுகையில்,

தெரியவில்லை

தெரியவில்லை

எனக்கு தெரியவில்லை. இது தான் நடக்கிறது. இதை தடுக்க ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

பேட்டிங்

பேட்டிங்

இந்திய அணியினர் எங்களுக்கு எதிராக அருமையாக விளையாடினார்கள். அவர்கள் பேட்டிங் மற்றும் பவ்லிங்கும் சிறப்பாக செய்தார்கள்.

ஏன்?

ஏன்?

இந்திய அணியை எங்களால் ஏன் தோற்கடிக்க முடியவில்லை என்றே தெரியவில்லை. அந்த போட்டி முடிந்துவிட்டது. இனியும் அதை பற்றியே பேசாமல் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும்.

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள்

இந்திய அணியில் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் சிலர் உள்ளது அனைவருக்கும் தெரியும். அவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் கற்க வேண்டியது நிறைய உள்ளது.

விக்கெட்டுகள்

விக்கெட்டுகள்

விக்கெட் எடுப்பது தான் முக்கியம். அது எங்களால் முடியாமல் போனது. இருப்பினும் எங்கள் பந்துவீச்சாளர்கள் கடைசி 10 முதல் 15 ஓவர்கள் சிறப்பாகவே பந்து வீசினார்கள் என்றார் மிஸ்பா.

Story first published: Monday, February 16, 2015, 10:11 [IST]
Other articles published on Feb 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+