Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப யோசிக்கிறதே கிடையாது பாஸ்.. முரளி விஜய் "கூல்" பேச்சு

மும்பை: 2 சீசனுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் முரளி விஜய். ஜிம்பாப்வே போகும் அணியில் இவருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது எதிர் வரும் தொடர் குறித்துப் பேசியுள்ளார் முரளி விஜய்.

டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம் பெற்று வரும் முரளி விஜய். 2 சீசன்களுக்குப் பிறகு ஒரு நாள் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தத் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூறுகிறார் முரளி விஜய்.

முரளி விஜய்யின் பேட்டியிலிருந்து....

2 சீசனாகிப் போச்சு

2 சீசனாகிப் போச்சு

2 சீசன்களுக்குப் பிறகு எனக்கு ஒரு நாள் போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு நாள் போட்டிகளில் ஆடுவதை நான் எப்போதுமே விரும்புவேன். இந்தத் தொடரையும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன்.

ரொம்ப எதிர்பார்க்கவில்லை

ரொம்ப எதிர்பார்க்கவில்லை

எப்போதுமே நான் எந்தப் போட்டியாக இருந்தாலும் எதிர்பார்ப்புடன் இருப்பேன். அதேசமயம், அதீத எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்வதில்லை. தலையில் அதிகம் ஏற்றிக் கொள்வதில்லை.

சரியாவே ஆடவில்லை

சரியாவே ஆடவில்லை

நான் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவிக்கவில்லை. இதற்காக யாரையும் குற்றம் சாட்ட நான் விரும்பவில்லை. 7 சீசன்களில் இதுவரை ஆடியுள்ளேன். 14 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளேன்.

சிறப்பாக விளையாடவே விரும்புகிறேன்

சிறப்பாக விளையாடவே விரும்புகிறேன்

எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறேன். வாய்ப்பு கிடைக்காதபோது குற்றம் சாட்டுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தத் தொடரிலும் சிறப்பாக ஆடி முயல்வேன்.

3 பார்மட்டிலும் ஆட வேண்டும்

3 பார்மட்டிலும் ஆட வேண்டும்

கிரிக்கெட்டின் 3 பார்மட்டிலும் சிறப்பாக ஆடி வேண்டும் என்பதே எனது ஆசை. டெஸ்ட்டில் சிறப்பாக ஆடும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற இரு பார்மட்களிலும் அது கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

தமிழகத்தில் நான் பெஸ்ட்

தமிழகத்தில் நான் பெஸ்ட்

தமிழக அணியில் நான் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரராக இருக்கும்போது ஏன் தேசிய அணியிலும் அப்படி இருக்க முடியாது. என்னா்ல் நிச்சயம் ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக ஆட முடியும் என்றார் முரளி விஜய்.

Story first published: Tuesday, July 7, 2015, 12:14 [IST]
Other articles published on Jul 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+