இது ரொம்ப பெரிய தப்பு.. இந்திய அணி இப்படி செய்திருக்க கூடாது.. எகிறும் வல்லுநர்கள்.. என்னாச்சு?
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து நட்சத்திர ஆட்டக்காரர் பும்ரா நீக்கப்பட்டது பேசுப்பொருளாகியுள்ளது.
இங்கிலாந்திடம் முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பழித்தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கும் நிலையில் 2வது டெஸ்டில் பும்ரா நீக்கப்பட்டுள்ளார்.
முக்கியமான நேரத்தில் நட்சத்திர வீரர் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது.

மாற்றம்
இந்திய அணியில் அதிரடி மாற்றமாக பும்ரா, வாஷிங்டன் சுந்தர், நதீம் ஆகியோருக்கு பதிலாக முகமது சிராஜ், அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய வீரர் பும்ராவுக்கு திடீர் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

விளக்கம்
பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டதற்கு விளக்கம் அளித்த கோலி, இங்கிலாந்து தொடர் நீண்டது என்பதால் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படுகிறது. மீதம் 2 டெஸ்ட் மற்றும் டி20, ஒரு நாள் போட்டிகள் இருப்பதால் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அதிருப்தி
இது குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது புரிந்துக்கொள்ள முடியவில்லை. 2வது டெஸ்டிற்கும் 3வது டெஸ்டிற்கும் இடையே 7 நாட்கள் இடைவெளி இருக்கிறது. இதற்கு முன்னர் இருந்த வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படாத சூழலில் இந்த கால வீரர்களுக்கு ஓய்வு தேவையாக தான் உள்ளது.

ஆதரவு
அணியின் முடிவுக்கு கம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார். பும்ரா குறித்து பேசிய அவர், சென்னை பிட்ச்சில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான அம்சம் இல்லை. அடுத்த போட்டிகளில் பும்ரா தேவை என்பதால் அவருக்கு ஓய்வு சரியான ஒன்றுதான் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications