என் மகளுக்கு நான் தான் அப்பா என தெரியுமான்னு தெரியலை: டோணி கல கல
ஹராரே: என் மகளுக்கு நான் யார் என அடையாளம் தெரியாது என நினைக்கிறேன் என்று கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.
டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றுள்ளது.
இந்த போட்டியை அடுத்து வரும் அக்டோபர் மாதம் வரை ஓய்வில் இருப்பார் டோணி

நியூசிலாந்து
அடுத்ததாக அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் தான் டோணி விளையாடுவார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் ஜிம்பாப்வே பயணத்தை அடுத்து நடக்க உள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்.

டோணி
நீண்ட ஓய்வு குறித்து டோணி கூறுகையில், ரொம்ப நாள் கழித்து கொஞ்சம் ஓய்வு கிடைத்துள்ளது. என் மகளுக்கு என்னை அடையாளம் தெரியாது என்றே நினைக்கிறேன். வீட்டில் இருந்து நான் தான் அப்பா என்பதை அவளுக்கு புரிய வைப்பேன் என்றார்.

பந்து வீச்சாளர்கள்
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நம் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் அருமையாக விளையாடி விக்கெட்டை எடுத்து எதிரணிக்கு பிரஷர் கொடுத்தனர். நம் வீரர்களின் பவுலிங்கை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது என்று டோணி தெரிவித்துள்ளார்.

பேட்ஸ்மேன்கள்
பிற பேட்ஸ்மேன்களுக்கும் குட்டி பிரேக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என டோணி தெரிவித்துள்ளார். இந்திய அணி அடுத்ததாக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications