
ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு..
30 அல்லது 40 ரன்களை விரைந்து எடுக்கும் கோஹ்லி, அதை பெரிய ஸ்கோராக மாற்றுவதில் தடுமாற்றம் அடைந்து வருகிறார். வங்கதேசத்துக்கு எதிராக காலிறுதி ஆட்டத்தில் மட்டுமே ஒற்றை இலக்க ரன்னில் கோஹ்லி வெளியேறினார்.

டோணி பேட்டி
கோஹ்லியின் தடுமாற்றம் குறித்து இந்திய அணியின் கேப்டன் டோணியிடம் நிருபர்கள் கேட்ட போது கூறியதாவது: விராட் கோஹ்லியின் பேட்டிங் மோசமாக இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாமல் அவர் நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார்.

எல்லா போட்டியிலும் முடியாது..
அதற்காக, களம் இறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடிக்க வேண்டும் என்பது முடியாத காரியம். டெஸ்ட் தொடரில் அவரது செயல்பாட்டை வைத்து ஒவ்வொரு இன்னிங்சிலும் அவர் சதம் விளாச வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மோசமாக அவுட் ஆகவில்லை
நடப்பு உலக கோப்பை தொடரில் அவர் அவுட் ஆன ஆட்டங்களில் மோசமான ஷாட்டுகளை தேர்வு செய்ததாக கருதவில்லை. நேர்த்தியான ஷாட்டுகள் மூலம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் கோஹ்லி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிப்பார்
எப்போதுமே பெரிய வீரர்கள் முக்கியமான ஆட்டத்தில் அதிக ரன்கள் குவிப்பார்கள். அதே போல் அவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு டோணி கூறினார்.


Click it and Unblock the Notifications











