Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்காக உலக கோப்பையை கேப்டன் வெற்றி கொள்வாரு... இது நடக்கும்... ஆரூடம் சொன்ன ஹர்பஜன்

டெல்லி : இந்திய கேப்டன் விராட் கோலி உலக கோப்பையை வெற்றி கொள்வதற்கான காலநேரம் வந்துவிட்டதாக ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை உள்ளிட்ட எந்த தொடரையும் விராட் கோலி வெற்றி கொள்ளாமல் விட மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் மிகப்பெரிய வீரராக உள்ள கேப்டன் விராட் கோலி வரும் 2021 அல்லது அடுத்த உலக கோப்பையை கண்டிப்பாக வெற்றி கொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக கோப்பை கனவு

உலக கோப்பை கனவு

இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச அளவில் சிறப்பான கேப்டனாக விளங்கி வருகிறார். அவரது கேப்டன்ஷிப்பில் இந்திய அணி பல்வேறு உயரங்களை அடைந்துள்ளது. உலக அரங்கில் சிறப்பான மற்றும் வலிமையான அணியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. ஆயினும் உலக கோப்பை உள்ளிட்ட முக்கிய கோப்பைகளை கைப்பற்றவில்லை என்ற குறை காணப்படுகிறது.

சர்வதேச அளவில் சிறப்பான பௌலர்கள்

சர்வதேச அளவில் சிறப்பான பௌலர்கள்

தற்போது இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பௌலிங் ஆர்டர் மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. குறிப்பாக ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட பௌலர்கள் சிறப்பான பௌலர்களாக தங்களை சிறப்பாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றனர்.

காலம் நெருங்கிவிட்டது

காலம் நெருங்கிவிட்டது

இந்நிலையில் கேப்டன் விராட் கோலி சிறப்பான கேப்டனாக விளங்கி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், அவர் உலக கோப்பையை இந்தியாவிற்காக பெற்றுத்தரும் காலம் நெருங்கி விட்டதாக கூறியுள்ளார். வரும் 2021 அல்லது அதற்கடுத்த கோப்பையை அவர் இந்தியாவிற்காக பெற்றுத் தருவார் என்றும் ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்.

உலக கோப்பை வெற்றி அமையும்

உலக கோப்பை வெற்றி அமையும்

ஏற்கனவே சர்வதேச அளவில் சிறப்பான வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள விராட் கோலியின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், உலக கோப்பை வெற்றி அமையும் என்றும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கேப்டனாக விராட் உலக கோப்பையை வெற்றி கொள்ளவில்லை என்ற குறை தீரும் என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 23, 2020, 15:40 [IST]
Other articles published on Nov 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+