தோனி ஃபிட்டாதான் இருக்கார்.. ஆனால் சான்ஸ் இல்லை.. முடிஞ்சு போச்சு.. ஆசிஷ் நெஹ்ரா பரபரப்பு
டெல்லி: எம்எஸ் தோனி மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவார் என நான் நினைக்கவில்லை. அதற்கான வாய்ப்பு இல்லை என்று பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
Recommended Video
ஏற்கனவே ஹர்பஜன் சிங்கும், தோனி இனிமேல் விளையாடும் வாய்ப்பு இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஆசிஷ் நெஹ்ராவும் அதே கருத்தைக் கூறியுள்ளார். இருவரும் இதற்கு சொல்லியுள்ள முக்கியக் காரணம் ஐபிஎல் போட்டிகள் நடக்காமல் போயிருப்பதுதான்.
ஆசிஷ் நெஹ்ரா கூறுகையில், கிட்டத்தட்ட தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது. மீண்டும் அவர் அணியில் இடம் பெறுவார் என நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஃபிட் ஆக இருக்கிறார்
இதுகுறித்து ஆசிஷ் நெஹ்ரா அளித்துள்ள ஒரு பேட்டியில், விளையாட வேண்டும் என்றால் முதலில் ஃபிட் ஆக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அவர் இன்னும் ஒரு நல்ல விக்கெட் கீப்பராக ஃபிட் ஆக இருக்கிறார். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகம்தான் என்று கூறியுள்ளார்.

சர்ப்பிரைஸ் கொடுக்கலாம்
அதேசமயம், அவரைப் பற்றித் தெரிந்தவன் என்ற வகையில் கூறுகையில், அவரிடமிருந்து எப்போது வேண்டும்னாலும் சர்பிரைஸை எதிர்பார்க்க முடியும். காரணம் அவர் இன்னும் தனது ஓய்வை அறிவிக்கவில்லை. அதேசமயம், தற்போதைய சூழலை தனது பாணியில் அவர் கையாண்டு வருகிறார் என்பதை மட்டும் என்னால் உறுதி படச் சொல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறந்த வீரர்
தோனி அணியில் இல்லை என்பது சோகமான செய்திதான். அவர் அணிக்குத் தேவையான அருமையான செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்டியவர். சிறந்த கேப்டன். நல்ல ஆட்டக்காரர். அருமையான மோட்டிவேட்டர். அதேசமயம், 5வது நிலையில் அணியில் கேஎல் ராகுல் ஆடிக் கொண்டிருக்கிறார். ரிஷப் பந்த் இருக்கிறார். சஞ்சு சாம்சன் இருக்கிறார். பந்த், தோனிக்கு நெருக்கடி தருகிறார் என்று சொல்கிறார்கள் என்றும் நெஹ்ரா கூறியுள்ளார்.

பந்த் பெரிய ஆள் இல்லை
உண்மையில் தோனி ஆடாவிட்டால் பந்த்துக்கே அங்கு இடமில்லை. அவர் சீனிலேயே வர மாட்டார். தோனிக்கு மாற்றாக பந்த்தை சிலர் சொன்னார்கள். உண்மையில் பந்த்துக்கு அந்த அளவுக்கு உயரம் இன்னும் வரவில்லை என்பதே உண்மை என்று கூறியுள்ளார் ஆசிஷ் நெஹ்ரா. பல்வேறு கேப்டன்களுடன் ஆடியுள்ள நெஹ்ராவுக்கு, தோனி மிகச் சிறந்த வாய்ப்புகளை அளித்து அவரது திறமையை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications