என் ஊரில் சுற்றுவதற்கு எதுக்கு பாதுகாப்பு?: டோணி
ராஞ்சி: ராஞ்சி தனது ஊர் என்றும் அங்கு தான் பாதுகாப்பாக உணர்வதாகவும் கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சொந்த ஊர் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி. டோணி ஒரு பைக் வெறியர் ஆவார். அவரிடம் பல சக்திவாய்ந்த பைக்குகள் உள்ளன. பைக் வெறியர் இத்தனை பைக்குகளை வைத்துக் கொண்டு சும்மாவா இருப்பார்.
ராஞ்சியில் இருக்கும் போதெல்லாம் டோணி பைக்கில் ஊர் சுற்றுகிறார்.

ஜாலியாக சுற்றுகிறார்
டோணி அதிகாலையிலேயே பைக்கை எடுத்துக் கொண்டு தன்னந்தனியாக ஊர் சுற்றுகிறார்.

போலீசாருக்கு கவலை
இப்படி தனியாக ஊர் சுற்றினால் டோணிக்கு மாவோயிஸ்ட்டுகளால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று போலீசார் அஞ்சுகின்றனர்.

சொல்லிட்டு போங்க பாஸ்
பைக்கில் செல்கையில் தங்களிடம் தெரிவித்தால் பாதுகாப்பு அளிக்க வசதியாக இருக்கும் என்று போலீசார் டோணியிடம் தெரிவித்தனர்.

எதுக்கு பாதுகாப்பு?
ராஞ்சி என் சொந்த ஊர். இங்கு நான் பாதுகாப்பாக உணர்கிறேன். அதனால் போலீஸ் பாதுகாப்பின்றி பைக்கில் செல்ல எனக்கு கவலை இல்லை என்று டோணி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ரோடு காலியாத் தான் இருக்கு
நான் பைக்கில் செல்கையில் சாலைகள் காலியாக இருக்கிறது. அதனால் அதிகாலையில் போலீசாரை தொல்லை செய்ய விரும்பவில்லை என்றார் டோணி.


Click it and Unblock the Notifications