Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல தோனி என்ன சொல்றாரோ… கண்மூடிட்டு செய்வேன்.. ஜெயிச்சுடுவோம்… ரகசியத்தை சொன்ன அவர்

கொல்கத்தா: கேப்டன் தோனி சொல்வதை செய்ததால் கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றி பெற முடிந்தது என்று பவுலர் இம்ரான் தாஹிர் கூறியிருக்கிறார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது சென்னை அணி.

1
45905

முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. இதையடுத்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

தாஹிர் ஆட்ட நாயகன்

தாஹிர் ஆட்ட நாயகன்

போட்டியில் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய சென்னை அணியின் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருது பெற்றார். போட்டிக்கு பின் வெற்றி குறித்து அவர் கூறியதாவது: நாங்கள் எதிர்பார்த்தபடியே வென்றுவிட்டோம்.

மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி

ஒவ்வொரு வெற்றியின் போது, எனது பங்கும் அதில் இருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போதும் தோனியுடன் விளையாடும்போது கடுமையாக உழைக்கிறேன்.

தோனி சொல்லும் விஷயம்

தோனி சொல்லும் விஷயம்

தோனி என்னிடம் ஒரு விஷயத்தை தொடர்ந்து கூறுவார். விக்கெட் டூ விக்கெட் பந்து வீச வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருவார். களத்தில் எப்படியும் பேட்ஸ்மென் தப்பு செய்வார்.

எனக்கு பெருமை

எனக்கு பெருமை

தல தோனியின் ஆலோசனையை பின்பற்றுவேன். விக்கெட் கிடைக்கும்... சென்னை அணியில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.

Story first published: Monday, April 15, 2019, 11:00 [IST]
Other articles published on Apr 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+